வியாழன், 14 மே, 2020

பிரம்மன்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

பிரம்மன்

சாவித்திரி, சரஸ்வதி, காயத்திரி இந்த மூவருக்கும் மணாளன் பிரம்மன்.  மூவரை மணந்தவர் கடவுள். 

விநாயகரின் மனைவிகளாகக் கூறப்படும் சித்தி, புத்தி இருவரும் பிரம்மனின் மகள்கள்.

நடனமாடும் பெண் ஒருவர், அவர் பெயர் உருப்பசி. அவரின் நடனத்தைப் பார்த்த பிரம்மனுக்குக் காமம் ஏற்பட்டது. 

துள்ளல், துவளலாய் மாறியதும், சிந்திச் சிதறிய விந்துத் துளிகளைத் திரட்டி, குடம் ஒன்றில் அடைத்தார் பிரம்மன். அக்குடத்தின் விந்து 'அகத்தியன்' என்னும் ஆளாக மாறியது.

பெற்ற மகளையே பெண்டாண்ட பெரியவன் என்று இந்தப் பிரம்மனுக்குச் சூடு கொடுத்தனர் சிலர்.                                                             

அசுவமேத யாகத்தை ஒருமுறை செய்தார். யாகத்தை வேடிக்கைப் பார்க்க தேவர்களின் பத்தினிகளும் வந்திருந்தனர். அந்த அழகிகளின் அழகில் கிளர்ச்சியுற்ற பிரம்மன், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. 

வீரியம் பீறிட்டு அடித்தது. அக்கினிக் குழியில் அந்த விந்துப் பெருக்கினை வார்த்தான். இதிலிருந்து பிறகு, ஆங்கீரசர், அத்ரி, மரீசி, புலஸ்தியர், புலகர் மற்றும் வசிட்டர் ஆகிய தவசிரேஷ்டர்கள் ஆகியோர் உதித்தனர். 
                                                    
சரஸ்வதியுடன் ஒருமுறை ஊடல் கொண்ட பிரம்மன், "பூமியில் பிற புலவனாய் பிழை" எனச் சாபம் கொடுத்தான். அதுவும் ஒரு உருவில் அல்ல,  நாற்பத்தெட்டு உருவில். இந்த நாற்பத்தெட்டு உருவங்கள் தான் சங்ககாலப் புலவர்கள்.

இதுபோல் 68 செய்திகளைத் தாங்கித் தருகிறது அபிதான சிந்தாமணியின் 1133 ஆம் பக்கமும், அதன் பக்கத்துப் பக்கங்களும்!

- வி.சி.வில்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக