வியாழன், 14 மே, 2020

இந்திரன்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

இந்திரன்:

தேவலோக அரசர் இந்திரனுக்கு தேவேந்திரன் என்ற பெயரும் உண்டு. 

இவர் திருமணமே ஆகாதவர். எனினும் காமத்தில் பெயர் பெற்றவர். 
காதல் கிழத்தியாக இந்திரனுக்கு நிரந்தரமாக இருப்பவர் இந்திராணி என்பவர்.

இவர் ஒரு சிரஞ்சீவிச் சிங்காரி! எத்தனையோ பேர் இந்திர உலகின் ஆளுகைப் பொறுப்புக்கு வந்து போனாலும், இந்திராணி மட்டும் மாறுவதில்லை.

ஒரு காடு ஒன்றில் பர்ண சாலை அமைத்து இல்லறம் நடத்தி வந்தார் ஒரு அப்பாவி முனிவர்.

இந்த முனித் தம்பதிகளின் பெயர் கவுதமன் -அகலிகை. இந்தக் கவுதமன் இந்திரனின் குரு ஆவார். 

குருவின் மனைவியை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று விரும்பினார் கடவுள் இந்திரன். 

அகலிகையின் அழகை அள்ளிப் பருகும் ஆர்வத்தில், நண்பர் சந்திரனையும் அழைத்துக் கொண்டு இரவு வேளையில் காட்டுக்குச் சென்றார் இந்திரன்.

அங்கே அகலிகையைக் கட்டிப் பிடித்து கவுதமன் கண்ணயர்ந்து கிடந்ததை இந்திரன் கண்டார். 

கோழியாக மாறி கூரைமேல் ஏறி, 'கொக்கரக்கோ' என்ற கூவினார் இந்திரன்.

அப்பாவி முனிவனுக்குப் பொழுது புலரப் போவதாக நினைத்து, நீராடும் எண்ணத்துடன் நீர்நிலை ஒன்றிற்குப் புறப்பட்டுப் போய்விட்டான்.

கோழியின் கூவலால் ஆவலை அடக்கும் அச்சாரம் கிட்டிய களிப்பில். கவுதமனாய் உருவெடுத்து, ஓரத்தில் ஒதுங்கி நின்ற சந்திரனிடம், இந்திரன் வந்தான்.

நடந்த நிகழ்ச்சிகளை வாய் திறவாமல் பார்த்தவாறு நின்று சந்திரனைப் பூனையாக மாற்றி "களிப்புற்று, சலிப்புற்று வரும்வரை காவலாய் இரு வாசலில் கிட" என்று சொல்லி அகலிகையின் அருகில் போனான் இந்திரன். 

காம்பெடுத்த உதிரி ரோஜாவாய் படுக்கையில் பரவலாய்க் கிடந்தாள் அகலிகை. ஊறிக் கிடந்த உணர்வுகளை, உணர்ச்சி ஆறிக்கிடந்த அகலிகையிடம் பாய்ச்ச, வாரி அணைத்தான் அவளை, 

சினமோ, சிணுக்கமோ இல்லாமல் இந்திரனோடு இணைந்தாள் அவள். அள்ளியும், கிள்ளியும் படுக்கையில் இவர்கள் துள்ளித் துவண்ட வேளையில் முனிவர் கவுதமன் வந்துவிட்டார்.

அகலிகையின் பத்தினித் தனம் இந்திரனால் இழிவுபடுவதைக் கண்டு துடிதுடித்துப் போனார் முனிவர். 

தனது குருநாதர் கோபத்துடன் வந்ததைப் பார்த்ததும், அகலிகையை உதறினார் இந்திரன். இருவரையும் புரியாமல் பார்த்தார் முனிவரின் மனைவி.

குருவுக்குத் துரோகம் செய்த கொடியவனே, என் மனைவியின் குறியிலே குறியாக இருந்த உன் உடம்பெங்கும் பெண் குறிகளே குடிகொள்ளட்டும்." என்று சாபம் கொடுத்தான் கவுதமன். 

"காமப்பாழி; கருவினை கழனி"

(ஆதாரம் அபிதான சிந்தாமணி 
பக்கம் - 155)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக