வியாழன், 14 மே, 2020

இராமன்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

இராமன்:

அயோத்தியை ஆண்டு வந்தவர் தசரதன். சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளாக ஆட்சி நடத்தியவர். 

இவருக்குக் கோசலை, கைகேயி, சுமத்திரை என்கிற 3 பட்டத்துக்குரிய மனைவிகள் உண்டு!

இதுவும் தவிர 60 ஆயிரம் மனைவிகளும் இருந்தனர். கூடுதலாக அந்தரங்கத்தில் வேறு பல பெண்களை கடவுள் தசரதன் வைத்திருந்தார். 

இத்தனை மனைவிகள் இருந்தும் குழந்தைகள் இல்லையே எனச் சங்கடப்பட்டார் தசரதன்.

(ஆதாரம்: அபிதான சிந்தாமணி 
பக்கம் - 1484)

"பிள்ளை பெறுவது எப்படி?" என ஆலோசனை நடத்தினார் தசரதன். 

அசுவமேத யாகத்தால் குழந்தை பெறலாம் என முனிவர் வசிஷ்டரும், அமைச்சர்களும் ஆலோசனை கூறினர்.

அசுவமேத யாகம் என்பது தனி வல்லுனர்களை வைத்துச் செய்ய வேண்டிய ஒன்று என்றும் விளக்கினார்கள் அவர்கள்.

கலைக்கோட்டு முனிவர் இதில் பெயர் பெற்றவர். அவரை இழுத்து வருவது சுலபமல்ல. ஒரு வழியாய் சரயு நதியோரம் முனிவர் இழுத்து வரப்பட்டார். 

கலைக்கோட்டு முனிவரின் தலைமையில் யாகம் துவங்கியது . சம்பிரதாயப்படி தசரதனின் முதல் மனைவியான கோசலை, யாகக் குதிரையைச் சுற்றி வந்து, அதனை மூன்று வெட்டாக வெட்டிக் கொன்றாள். பின்னர் துடிதுடித்தக் குதிரை முண்டங்களுடன் இரவு முழுவதும் உடலுறவு கொண்டார். 

காலை விடிந்ததும் கோசலை  தசரதனிடம் போனார். தசரதனின் மற்ற இரு பட்டத்து மனைவிகளான கைகேயியும், சுமத்திரையும் அவர் அருகே நின்று கொண்டிருந்தனர்.

யாக வேள்வியில் கலைக்கோட்டு முனிவருக்கு உதவியாக இருந்த அத்வர்யு, ஹோதா மற்றும் உகதா ஆகிய மூன்று சிஷ்ய முனிவர்களுக்கும், தனது 3 மனைவிகளையும் தானம் செய்தார் தசரதன். 

முனிவர்கள் மூவரும் தசரதனின் மனைவியருடன் இரவு முழுவதும் களிப்புற்றனர்.

பின்னர் முனிவர்களுக்குத் தசரதன் பொன்னும், பொருளும் கொடுத்து அனுப்பி வைத்தான்.

அன்றே தசரதனின் மனைவியர் மூவரும் கருவுற்றனர். இக்கருக்களின் உருக்களே இராமனும் அவரின் இளவல்களும்.

விஷ்ணு பற்றிய கதைப்படி, இந்த ராம அவதாரமென்பது விஷ்ணுவின் தசாவ அவதாரங்களில் ஒன்று!

- வி.சி.வில்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக