கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)
சிவன்!
சிவபெருமான் கடவுள்களின் தலைவர். இவர் யாருக்கும் பிறந்தவர் அல்ல. தானாகவே தோன்றியவர் (சுயம்பு)
பிரம்மனையும், விஷ்ணுவையும் இவரே தோற்றுவித்தார். இந்த இரு கடவுளும் சக்தியின் முகத்திலும், தோளிலும் பிரசவம் ஆனவர்கள்!
விஷ்ணுவை அழைத்தார் சிவன். மோகினி உருவெடுத்துத் தாருகாவனத்து ரிஷிகளின் மோகத்தை ஒரு கை பார்.
ரிஷி பத்தினிகளின் படுக்கையறை பசி, பட்டினிக்குப் பருவப் பார்வையால் பதில் தெளித்தார் சிவன்.
அதுவும் சிவனாக அல்ல, பைரவர் வேடத்தில். ரிஷிகளும் வந்தனர். தமது தர்மப் பத்தினிகளிடம் தரங்கெட்ட ஆட்டம் போட்டவர் சிவன் என அறிந்ததும் 'சிவனே' என்று சிலர் குந்தினர். "சிவ- சிவ"என்று சிலர் பொங்கினர்.
பெரியவர் செய்தால் பெருமாள் செய்த மாதிரி என்ற சொல்லின் மூலம் இதுதான் தனக்குப் பிராயச்சித்த பரிகாரமும்!
இறுதியில் சிவன் சொன்னார்.
"ரிஷிகளே! அபிசார வேள்வி செய்யுங்கள் ஆகட்டும் பார்க்கலாம்," என ஓடிவிட்டார். அபிசார வேள்வி என்பது ஒரு பிராயச்சித்த காரியம். சிலர் தலைக்கனம் பிடித்துத் திரிந்ததற்குக் கற்பழிப்பது என்ன முறை?
(ஆதாரம் : அபிமான சிந்தாமணி,
பக்கம் - 659)
- வி.சி.வில்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக