உடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான்? புராணம் கூறுவதைப் படியுங்கள்.
அரம்பையர்கோன் (எ) இந்திரன்
இந்திரன் - எல்லோருக்கும் தெரிந்த பெயர். அவன் தேவர்களின் தலைவன். அவனுக்கு அரம்பையர் கோன் என்றொரு பெயரும் உண்டு. காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வோமா?
அரம்பையர் உலகம் என்பது 60 ஆயிரம் அப்சரசுகள் (தேவமாதர்கள்) உள்ள ஓர் உலகம். அதில் பாற்கடலில் பிறந்த அலம்புஷை முதற்கொண்டு ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருதாசி முதலிய அப்சரசுகள் நிறைந்துள்ளனர்.
இவர்கள் இளமை நீங்காது வேண்டிய உருவெடுப்பர். இங்கு இருமனப் பெண்டிரும், விரதம் தவறிய பெண்களும் சென்றடைவர். (அப்சரசு = தேவருலகத்திலுள்ள வேசிகள். பக்கம் 95. அபிதான சிந்தாமணி).
இவர்களுக்குத் தலைவன் இந்திரன். அதனால்தான் இந்திரனுக்கு “அரம்பையர் கோன்” என்று பெயர் வந்தது. அதாவது இந்திரன் தேவருலகத்திலுள்ள “வேசிகளின் அரசன்” என்று பொருளாகும். அவர்களை அவன் வேலை வாங்குவது எப்படி என்கிறீர்களா?
உலகத்தில் ‘பெருந்தவம்’ செய்வோர் இந்திர பதவியை அடைவர். பதவியில் இருக்கும் இந்திரன் தன் பதவியைக் காத்துக் கொள்ள இந்தத் “தேவருலக தாசிகளை” அனுப்பி பெருந்தவம் செய்வோர் தவத்தைக் கெடுப்பான். அதே முறையில் தான் மேனகை விசுவாமித்திரனின் தவத்தைக் கெடுத்தாள்.
இவனும் விஷ்ணுவைப் போலவே பரிஷதன் என்னும் அசுரன் மனைவி மீது ஆசை கொண்டு, எவ்வளவோ முயற்சித்தும் ஆசை நிறைவேற வசதியில்லாமல் போகவே, பரிஷதன் அசுவ மேத யாகம் செய்கையில் யாக முறைப்படி யாகத்தில் குதிரையைக் கொன்ற போது, அந்தக் குதிரையின் உடலுக்குள் புகுந்து, குதிரையின் ஆண் குறியை யாக கர்த்தாவின் மனைவியான விபுஷ்டையின் பெண் குறியில் வைக்கும் சமயம் பார்த்து இந்திரன் குதிரையின் ஆண் குறியாக ஆகித் தனது எண்ணத்தை முடித்துக் கொண்டான் என்று புராணத்தில் இருக்கிறது.”
---மு.நீ.சிவராசன். SOURCE: “உண்மை” 14.1.1970.
- subramanya annadurai annadurai முகநூல் பதிவு 23.5.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக