வியாழன், 14 மே, 2020

முருகன்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

முருகன்:

சுப்பிரமணியக் கடவுளின் அனந்தகோடி சகஸ்ர நாமங்களில் ஒன்று ஸ்கந்தம். வடமொழியில் தத்தெடுத்து, தமிழ் மொழியில் பிய்த்து வந்த கந்தன் என்கிற பெயரின் மூலம் இதுதான்.

ஸ்கந்தம் அல்லது கந்தம் என்றால் 'விந்து' என்று பொருள்.

விந்திலிருந்து பிறப்பது தான் உயிரினம். அய்ந்தறிவு முதல் இன்னொரு அறிவினையும் உபரியாகப் பெற்றுள்ள மனித இனம் வரை இதுவே நடைமுறை. ஆனால் கடவுள் அதீதப்பிறவி.  அப்படி இருந்தால் தானே மனிதருக்கும், மகேசப் பிறவிகளுக்கும் வேறுபாடு தெரியும்.

சிவன் தனது "சிருஷ்டி"பற்றி பரிசீலனை செய்தார். ஒரு அவசரகால நடவடிக்கையாகத் தனது கலவியை 
நிறுத்தி இந்திரியத்தை (விந்து) வானவீதியைப் பிரித்துக் காட்டும் சூன்ய வெளியில் சொரீர் எனப் பாய்ச்சி அடித்தார். பிரவாக வேகத்திற்காகப் பீய்ச்சி அடித்தார். ஓ... விந்தின் பிரளயம்!

மழையாய்ச் சொரிந்து, மண்ணில் மறைந்து, நொங்கும் நுரையுமாய் அலையடித்து ஓய்ந்து, கங்கையில் ஒடுங்கிய விந்துச் சுழலில் ஆறு மிதப்புகள். நீரில் பெய்த எண்ணெய் துளிகளாய் மிதந்து அலைந்தன அவை.

நீராட வந்த பெண்கள் அறுவர் போராடிப் போராடி அந்த விந்துத் திவலைகளில் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டனர்.

எடுத்தது தான் மாயம். விந்துத் திவலைகள் உயிர் பெற்று, குழந்தைகளாய் மாறி குமிழ்ச் சிரிப்பைச் சிந்தின.

சிந்திய குழந்தைகள் அத்தோடு விடவில்லை. தழுவிக் கிடந்த மார்பகக் கரு நுனியில் வாய்வைத்துப் பால் உறிஞ்சின. 

பின்னர் ஆறு உடலையும் ஒன்றாக வைத்தார்கள் அந்தப் பெண்கள். உடல் ஒன்றானது. ஆனால் தலைகள் ஒன்றாகவில்லை. 

"ஆறுமுகம்" ஆகி அதுவே கடவுளும் ஆனது!

(ஆதாரம் - பாகவதம் மற்றும் இராமாயணம்)

- வி.சி.வில்ஸம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக