செவ்வாய், 2 ஜனவரி, 2018

சம்புகனின் படுகொலை

சம்புகனின் படுகொலை - வர்ணாசிரம சாதிவெறி இந்துமதம் ..

ராமன் ஆட்சிக் காலத்தில் பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைய நேர்ந்தது.

மகனைப் பறிகொடுத்த தந்தை தன் பிள்ளையின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு இராமனின் அரண்மனையை நோக்கிப் போனான். அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்தி விட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு இராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்கு காரணம் என்றான்.

(அவன் பாவம் என கூறியது சூத்திரன் தவம் செய்ததையே. அதனால்தான் தன் மகன் மரணம் நேர்ந்தது என்கிறான்.)

அதைக் கேட்ட நாரதன் உட்பட அறிவார்ந்த எட்டு ரிஷிகளுடன் இராமனிடம் கலந்தாலோசித்தனர்.

அந்த அறிஞர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், “நாட்டு மக்களுள் அதாவது இராம இராஜ்யத்தில் யாரோ சூத்திரன் ஒருவன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும், அச்செயல் தருமத்திற்கு எதிரானது” என்றும் நாரதன் சொன்னான்.

“தரும சட்டங்களின்படி, பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்களுக்கு சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை” என்று மேலும் நாரதன் கூறினான்.

தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்ற இராமன், உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றித் துருவி அக்குற்றவாளியைப் பிடித்துவரப் புறப்பட்டான்.

இறுதியில் நாட்டின் தெற்கே அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். அந்த தவம் செய்து கொண்டிருந்தவன் தான் சம்பூகன் என்னும் சூத்திரன். மனித உருவிலேயே மோட்சத்திற்கு செல்ல தவம் செய்துகொண்டிருந்தான்.

விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவி விட்டான் இராமன்.

அதே நொடியில் எங்கோ தொலை தூரத்து அயோத்தியில் அகால மரணமடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம்.

கடவுள்களெல்லாம் மன்னன் இராமனின் மீது மலர் தூவி மகிழ்ந்தார்களாம். தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டதைத் தடுத்து, தண்டித்து சம்பூகனைக் கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக அவர்கள் மகிழ்ந்தார்களாம்.

கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன்தோன்றி அவன் செய்த இந்நற்காரியத்திற்காக அவனைப் பாராட்டினார்கள்.

அயோத்தி அரண்மனை வாசலில் பிணமாய்க் கிடந்த பிராமணச் சிறுவனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று கடவுள்களிடம் இராமன் வேண்டினான்.

‘’அந்த பிராமணச் சிறுவன் எப்போதோ உயிர்பெற்று எழுந்து விட்டான்’’ என்று அவர்கள் இராமனுக்கு சொல்லி விட்டு மறைந்து போயினர்.

அதற்குப் பின் இராமன் அருகிலிருந்த அகத்திய முனிவனின் ஆசிரமத்துக்குப் போனான். சம்பூகனைக் கொன்ற நற்செயலைப் பாராட்டி தெய்வ மகிமையுள்ள காப்பு ஒன்றை அகத்தியன் இராமனுக்கு பரிசாய் அளித்தான்....

(வாலமீகி ராமாயணம் உத்தரகாண்டம் -  சரகம் 42.)

காவிவெறியர்களான RSS, சிவசேனா, PJB, இந்து முன்னணி போன்றோர் அமைப்பதாய் சொல்லும் இந்து ராஜ்ஜியம் எத்தகையதென்று புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே...

காவிவெறியாட்டத்தை முற்றிலும் அடக்கி ஒடுக்கிவது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்...
டக்ளஸ் முத்துகுமார், முகநூல் பதிவு,
2.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக