அது என்ன பங்குனித் திருவிழா?
அந்த நாளில் பங்குனி உத்திர நாளில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்ததாம்.
சிவனுக்கும், பார்வதிக்கும் பல திருமணங்கள் நடந்துள்ளன. பார்வதியை பல உருவங்களில் பிறக்கச் செய்வாராம் பிறகு மணந்து கொள்வாராம். அதனால்தான் சிவன் திருமணம் என்று பக்தர்கள் சொல்லமாட்டார்கள். பார்வதி கல்யாணம் என்றுதான் கூறுவார்கள்.
கல்யாணம் என்றால் விளையாட்டு என்றும் பொருள். சீதா கல்யாணம், ருக்மணி கல்யாணம் என்று தான் சொல்வார்கள். வள்ளித் திருமணம் என்று ஏன் கூறுகிறார்கள்? வள்ளி தமிழச்சியாம்! கடவுள் பக்தர்களுக்கு மொழி பக்தி கூட உண்டு போலும்!
சிவன் பார்வதி கல்யாணத்துக்கு உலக மக்கள் எல்லாரும் இமய மலைக்குக் கூடி விட்டார்களாம். எனவே, பளு தாங்காமல் பூமி வடக்குத் திசையில் தாழ்ந்து போய் விட்டதாம். பூமி தட்டையாக சீசா பலகை போல இருக்கிறதா? என்ன முட்டாள் தனம் பாருங்கள்!
எனவே, பூமியைச் சமன் செய்ய சிவன் ஓர் ஆளை அனுப்பியதாம். அவன்தான் அகத்தியன். குறுமுனி. குள்ள உருவம். 20 கிலோ எடை இருப்பானோ? சந்தேகம்தான்.
அகத்தியன் தெற்கே வந்ததும் பூமித் தட்டை சமனாகி விட்டதாம். கல்யாணம் சங்கடமின்றி நடந்து முடிந்ததாம். அந்த நாள் தான் பங்குனித் திருவிழா.
அன்றைக்கிருந்த மூடர்கள் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கமாட்டார்கள் என்று அடித்துவிட்ட கதை. ஆனால் இறைக்கும் இதை ஏன் எதற்கு என்று யோசிக்காமல் தொடர்பவர்களை என்னவென்று கூறுவது?
ஆன்மீகவாதி என்பதா? அடிமுட்டாள் என்பதா?
-முகமது நசீம், பகுத்தறிவாளர்கள் vs மதவாதிகள், முகநூல் பதிவு, 9.1.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக