புதன், 3 ஜனவரி, 2018

கம்பராமாயணம் கடவுள் காவியமா? அல்லது காம காவியமா?

கம்பராமாயணம் கடவுள் காவியமா? அல்லது காம காவியமா? - அர்த்தமுள்ள இந்துமதம்..

வாராழி கலச கொங்கை
வஞ்சி போல் மருங்குவாள் தன்
தாராழிக் கலைசால் அல்குல்
தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில் தங்கும் பாந்தமும்
பணி வென்றோங்கும்
ஓராளித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன?

என் மனைவி எப்படிப்பட்ட அழகி தெரியுமா?

சீதாப் பிராட்டியாரின் கொங்கை எப்படி இருக்கும் தெரியுமா...? என்று ஆரம்பித்து ஒவ்வொரு உறுப்பின் அழகையும் அளவையும் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமன் மகாலட்சுமியின் அவதாரமான சீதையைப்பற்றி பிரம்மச்சாரியாகிய அனுமானிடம் அவளின் அங்க அடையாளங்களை  சொல்லி அனுப்பினான் என்று கம்பன் எழுதியுள்ளான்.

"செப்பென்பன் கலசம் என்பன்
செவ்விள நீரும் தேர்வன்
துப்பொன்று திரள்சூ தென்பன்
சொல்லுவன் தும்பிக் கொம்பை
தப்பின்றிப் பகலின் வந்த
சக்கரவாகம் என்பன்
ஒப்பொன்றும் உலகின் காணேன்
பல நினைத்து உலைவன் இன்னும்."

அதாவது இராமன் கூறுகிறார் "என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கைக்கு உவமை தேடித் தேடிப் பார்க்கிறேன், ஒன்றும் பொருத்தமாக இல்லை. உலகிலேயே ஒரு பொருளும் இல்லை அவைகட்கு இணை. என்ன செய்வேன்!" என சோகிக்கிறார். "செப்புக் கலசமோ!" "செவ்விளநீரோ!" என தன் மனைவியின் கொங்கைகளுக்கு உவமை தேடுகிறார் அந்தக் கடவுள்?

அதிலும் இந்த உவமைகளையும் அவர் சொல்லுவது கட்ட பிரம்மச்சாரியாகக் கருதப்படும் அவரின் நண்பன் அனுமனிடம். இது போன்ற உவமைகள் நண்பனிடம் சொல்லப்படுவதாக காமம் சொட்டும் காம காவியங்களில் கூடப் படித்திருக்க முடியாது. ஆனால் இந்த கம்ப இராமாயணத்தில் படிக்கலாம்.

ராமன் தன் பொண்டாட்டி அழகை பற்றி அங்கங்கமாக அடுத்தவனிடம் விவரிக்கிறான் எனில் கடவுளின் வேலை என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.. ?

இது வெறும் சாம்பிள் மட்டும் தான். இதை விட கொடுமையான ஆபாச வர்ணனைகள் எல்லாம் நிரம்பி வழியும் காவியம் தான் இந்த "இராமாயணம்". அதிலும் அத்தகைய ஆபாசங்கள் வைக்கப் பட்ட இடங்கள் படிப்பவர்களை நிச்சயம் காறித் துப்ப வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இது பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் படிக்கக் கூடாத ஒரு ஆபாச நூலாகத் தோன்றுமளவு இருக்கிறது கம்பனின் வர்னனைகள்.

ஆபாசத்தையே புராணமாக  படைத்த கம்பனை தற்போதைய இலக்கியவாதிகளான யோக்கியர்கள் புகழ்ந்து மேடையில் பேசுகின்றார்கள் எனில் அவனின் இலக்கிய ஆர்வம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்..

அறிவுக்கு சம்பந்தமில்லாத ராமாயண செய்யுள்களை பள்ளி பாடப் புத்தகத்தில் வைக்கிறார்கள் எனில் இந்த நாட்டின் கல்வி குழுவின் செயல்பாடுகள் எப்படிப்பட்டதாய் இருக்கும்?

-டக்ளஸ் முத்துகுமார், முகநூல் பதிவு
3.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக