செவ்வாய், 23 ஜனவரி, 2018

ஆண்டாளின் கதை

ஆடிப்பூரம் என்பார்களே அது என்ன தெரியுமா? திரு வில்லிப்புத்தூர் பெருமாள் கோயிலில் ஒரு நந்தவனம், அந்த நந்தவனத்தில் நாள் தோறும் பூக்களைப் பறித்துப் பெருமாளுக்குச் சூட்டும் பணி பெரியாழ்வாரைச் சார்ந்தது.

ஒரு நாள் பூபறிக்க அந்த நந்தவனத்துக்குச் சென்றபோது, குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டதாம்! ஆச்சரியத்தோடு அங்குமிங்கும் ஆழ்வார் கண் களைச் சுழல விட்டார். என்ன ஆச்சரியம்! ஆங்கே ஒரு குழந்தை, (ஜிபூம்பா!). ஓடோடிச் சென்று அந்தக் குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாராம். அந்தக் குழந் தையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தாராம். (சீதைகூட அனா தையாகக் கண்டு எடுக்கப் பட்டவள்தான் - வைணத்தில் இப்படியொரு தொடர் புராண அளப்புப் போலும்!)

திருவில்லிபுத்தூரில் அந்த அனாதைக் குழந்தையைக் கண் டெடுத்த நாளில்தான் ஆடிப் பூரம்! கோதை நாச்சியார் என்று அந்த அனாதைக் குழந்தைக்கு பெயர் சூட்டினார் பெரியாழ்வார்.

கொஞ்சம் வளர ஆரம் பித்தவுடனேயே அந்தக் குழந்தை என்ன செய்ததாம்? பெருமாளுக்கு நாள்தோறும் தன் தந்தை கட்டி வைத்த பூமாலையை, பெருமாளுக்கு அணிவிப்பதற்கு முன்பாகவே தன் கழுத்தில் சூட்டிக் கொண்டு அழகு பார்ப்பாளாம்.

ஒரு நாள் அவ்வாறு அவள் செய்து கொண்டிருந்தபோது அய்யங்கார் பார்த்துத் திடுக் கிட்டு விட்டார். 'பகவானுக்குச் சூட்ட வேண்டிய மாலையை மனுஷாள் சூட்டிக் கொள்ள லாமோ! அபச்சாரம்' அபச்சாரம் என்று தலையில் அடித்துக் கொண்டாராம்.

மீண்டும் புதிதாகப் பூக் களைக் கொய்து, மாலையாக்கி நீல வண்ணக் கண்ணணுக்கு அணிவிக்கச் சென்றபோது அந்தப் பெருமாள் மறுதளித் தாராம். ஆண்டாள் தன் கழுத் தில் அணிந்த அந்த மாலைதான் தனக்கு வேண்டும் என்று அய்யன் பெருமாள் அடம் பிடித்தாராம். சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் என்ற பட்டம் இப்படிதான் வந்ததாம்.

பிஞ்சில் பழுத்த அந்தப் பெண் அடுத்த கட்டத்திற்குச் சென்றாளாம். கட்டினால் நான் இந்தப் பெருமாளைத்தான் கட்டிக் கொள்வேன் - கல் யாணம் செய்து கொள்வேன் என்று ஒற்றைக் காலில் நின் றாளாம்.

பக்தைக்கும், பகவானுக்கும் காதலாம். சிறீரங்கத்தின் கோபு ரத்திலிருந்து சிறீ வில்லிப்புத் தூரில் உள்ள தம் காதலி ஆண்டாளுடன் பகவான் காதல் மொழிபேசுவாராம். (அந்தக் காலத்திலேயே இந்த சினிமாத் தனமா!)

ஆண்டாள் என்ற அந்த பக்தை பகவானிடம் மையல் கொண்டு பாடிய பாடல்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? 143 - இவைதான் "நாச்சியார் திருமொழி" என்பது.

ஒவ்வொன்றும் நைட் கிளப் பாடல்தான் போங்கோ!

கொள்ளும் பய னொன்

றில்லாத கொங்கை

தன்னைக் கிழங்கோடும்

அள்ளிப்பறித்திட்டு

அவன் மார்பில்

எறிந்து என்னழகைத் தீர்வேனே!

இது ஆண்டாள் பாசுரம்! பக்தியில் பார்ப்பனர்கள் புரண்டு கிடப்பது ஏனென்று இப்பொழுது புரிகிறதா?

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 13.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக