#சைவமும்_சமணமும்
இந்தியாவில் தோன்றிய பழைய இறைமறுப்புக் கொள்கைகளை சமணம் என்ற பொதுப்பெயரில் அடையாளப்படுத்துவர். சமணர் என்பதற்கு எளிய வாழ்க்கையையும் துறவு நிலையையும் பின்பற்றுபவர்கள் என்று பொருள். கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சில குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே ஜைனத்தை மட்டும் குறிக்க தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ் மொழி நிகண்டுகளில் சாவகர், அருகர், ஆசீவகர் மூவரையுமே சமணர் என பண்டைய தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் பௌத்தம், அஞ்ஞானம், வேதாந்தம் போன்றவற்றையும் சமணம் என்றே அடையாளப்படுத்தினர்.
சரி விடையத்திற்கு போவோம்..
கி.பி ஏழாம் நூற்றாண்டளவில் ஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய முட்டாள் பாண்டிய மன்னன் நின்றசீர்நெடுமாறன், சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள சாமணத்தம் என்னும் இடத்தில் கழுவேற்றினான்.
சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது.
வாதம் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. சிவன் பெயர் எழுதிய சீட்டு நீரில் அடித்து செல்லபடவில்லையாம், சமணர்கள் கடவுள் இல்லை என்ற சீட்டு நீரில் அடித்துசெல்லபட்டதாம். (என்ன திருகுதாளம் செய்தானுகளோ!)
இதனால் கடவுள் இருப்பு நிரூபிக்கபட்டு விவாதத்தில் தோற்றதாக கூறி எண்ணாயிரம் சமணர்களும் கழுவேற்றப்பட்டார்கள். இதற்கான ஒழுங்குகள் செய்தது குலச்சிறை நாயனார்.
"துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க"
எனும் பெரியபுராணப் பாடல் சமணர் கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது. மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளில் இக்கழுவேற்றம் நடத்திக் காட்டப்படுகிறது. கழுகுமலைக் கோயில் சுவரோவியங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த மன்னன் விட்டுவிடவில்லை. மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.
'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'
'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'
இவ்வாறு பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் கூறுகிறது.
சாவிற்கு பயந்த சமணர்கள் விபூதி இட்டு சைவத்தை ஏற்று மதம்மாறினார்கள்.
திருஞானசம்பந்தன், திருநாவுக்கரசர் முதல் தொண்டரடிபொடியாழ்வார் வரை சமணத்திற்கு இளைத்த அநீதி கொஞ்சநஞ்சமல்ல.
திருஞான சம்பந்தன் சமண சமய பெண்களை கற்பழிக்க அருள் தருமாறு கடவுளை வேண்டி தேவாரமே பாடியுள்ளான். அந்த தேவாரம் பின்வருமாறு அமைகிறது..
"மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே."
பொருள்:
மண் அகத்திலும் = மண்ணிலும், இந்த பூமியிலும்
வானிலும் = தேவர் உலகிலும்,
எங்குமாம் = வேறு எல்லா இடத்திலும்
திண் அகத்து = திண்மையான மதில்களை கொண்ட
திரு ஆலவாய் = மதுரை (திரு + வால் + வாய்)
அருள் = அருள் செய்ய வேண்டும்
பெண் அகத்து எழில் = பெண்களிடம் உள்ள எழில்
சாக்கியப் பேய் அமண் = சாக்கியரோடு கூடிய பேய் போன்ற சமண சமய
தெண்ணர் = திண்ணர், திண்மையான உடல் உள்ளவர்கள், குண்டர்கள்,
கற்பழிக்கத் திரு உள்ளமே = கற்பை அழிக்க திருவுள்ளம் அருள வேண்டும்.
இது சம்பந்தனின் யோக்கியதை.
"கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலத்தில் அதாவது பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து போயின."
இந்த வரலாறுகள் கண்டிப்பாக எல்லோரும் தெரிந்திருக்க வேண்டியவை.
#பகிருங்கள்
#Share_This
-வேணுகோபால சங்கர்+ஆறாம் அறிவு முகநூல் பதிவு(12.12.17)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக