ரிஷிகளின் மனைவிமார்களின் கற்பை சூறையாடிய சிவன் - ஓம் நமசியவாய...
சிவபெருமான்தான் கடவுள்களின் தலைவன், இவன் யாருக்கு பிறந்தவன் என்று தெரியவில்லை. தானாகவே தோன்றியவன் (சுயம்பு) என்கிறார்கள்.
ரிஷிமூலம், நதிமூலம் போல், இவன் பிறப்பு மூலத்தையும் ஆராயக்கூடாது. பிரம்மனையும், விஷ்ணுவையும் இவன்தான் தோற்று வித்தவன்.
இந்த இரு கடவுளும் கூட சக்தியின் முகத்திலும் தோளிலும் பிரசவமானவர்களாம்!
“நமசிவாய”என்னும் அய்ந்தெழுத்தை(பஞ்ச அட்சரம்) பிரமனுக்குப் போதித்தவனும் சிவன்தான்.
ஒரு காலத்தில் தன்னைத்தேடி ஓடிவந்த தேவர்களிடம் என்னவென்று கேட்க சிவனுக்குத் தாருகாவனத்து ரிஷிகளின் தலைக் கனம் புலப்பட்டது.
ரிஷிகளின் கனத்தைவிட , ரிஷி பத்தினிகளின் கனமும் – ( தலைக்கனந்தான்) சிவனின் கவனத்திற்கு வந்தது.
கனத்தை இறக்கி, அந்த அற்ப ஆத்மாக்களுக்கு நல்ல குணத்தை ஏற்படுத்துவதாக வாக்களித்தான் சிவன்.
விஷ்ணுவை அழைத்தான் சிவன் “மோகினி உருவெடுத்து, தாருகாவனத்து ரிஷிகளின் மோகத்தை ஒரு கை பார்” எனத் தனக்குக் கட்டளை பிறந்ததும், தளுக்குக் குலுக்குடன் விஷ்ணு தத்தித் தாவினான் தாருகாவனத்திற்கு.
மோகினியாய் மாறிய விஷ்ணு ரிஷிகளுக்கு ருசிகளை வழங்கி கலங்கிக் கிடந்த வேளையில்.
ரிஷி பத்தினிகளின் படுக்கை அறைப் பசி, பட்டினிகளுக்குப் பருவப் பார்வையால் பதில் தெளித்துவந்தான் சிவன். அதுவும் சிவனாக அல்ல, பைரவர் வேடத்தில்.
தங்கள் மனைவிமார்கள் எங்கெங்கே, என்னென்ன செய் கிறார்கள் என்பதை அறிய, தங்கள் ‘ஞானதிருஷ்டி’ யக் கூட முடுக்கிவிட மறந்தவாறு மோகினி காட்டிய சொர்க்கத்தில் மூழ்கித் திளைத்தனர் ரிஷிகள்.
ரிஷி பத்தினிகளின் கதையும் இதேதான்.
வந்தது யார் என அடையாளம் நோக்காமல், அணைத்து மகிழ்ந்து ஆசை தணிந்தபின் “போச்சே கற்புப் போச்சே” என்று கூவினர். பருவச்சுவையினைப் பருகி உருகிய பத்தினிகள் பதறிப் புலம்புவதையும், கதறிக் குழம்புவதையும் பார்க்கப் பார்க்கப் பொறுக்கவில்லை அந்தச் சிவனுக்கு.
ரிஷிகளும் வந்தனர். தமது தர்மப் பத்தினிகளிடம் தரங்கெட்ட ஆட்டம் போட்டவன் சிவன் என அறிந்ததும் ‘சிவனே’ என்று சிலர் குந்தினர். “சிவ- சிவ”என்று சிலர் பொங்கினர்.
பெரியவர் செய்தால் பெருமாள் செய்த மாதிரி என்ற சொல்லின் மூலம் இதுதான் தனக்குப் பிராயச்சித்தப் பரிகாரமும் இறுதியில் சிவன் சொன்னான்.
ரிஷிகளே.. ‘அபிசார’ வேள்வி செய்யுங்கள் ஆகட்டும் பார்க்கலாம்' என ஓடிவிட்டான்.
"இந்த காவாலி கடவுளை கும்பூடுறதுதான் பக்தி யோக்கியமாடா"
(ஆதாரம் : அபிமான சிந்தாமணி பக்கம் 659)
- டக்ளஸ் முத்துக்குமார், முகநூல் பதிவு,
28.12.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக