27.05.1934 - புரட்சியிலிருந்து....
மனிதனுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் மதப்பித்தானது மதுவை உட்கொண்ட வனுக்கு எப்படி அவன் சொந்த புத்தி மறைந்து அவசியமற்றதும், ஒழுங்கும் அறிவும் அற்றதுமான காரியங்களையே நினைக்கவும், பேசவும், செய்யவும் ஆளாகிறானோ அதே போல் மத வெறியானது குறிப்பிட்ட அதாவது மனிதனுக்கு இருக்க வேண்டிய ஒழுக்கம் நட வடிக்கை என்பவை லட்சியமற்றதாகி வெறும் மத பக்தியே லட்சியமுடையதாகி அதற்காக வாழ வேண்டி யதையும், அதற்காக உயிர்விட வேண்டியதையும் மனிதனின் முக்கிய கடமையாக ஆக்கப்பட்டிருக்கிறது.
இதை மதவாதிகள் உணர வேண்டுமானால் ஒவ்வொரு மதவாதியும் தன் தன் மதத்தைப் பற்றி நினைக்காமல் தனக்குத் தெரிந்த வரையில் பிறமதக் கொள்கைப்படி உள்ள ஒழுக்கங் களையும் நடவடிக்கைகளையும் பிறமதக்காரன் பின்பற்றி நடக் கின்றானா என்பதையும் கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு மதக்காரர்களின் யோக்கியதையும், மற்ற மதக்காரர்களுக்குத் தெரியும்.
மற்றபடி அவரவர் மதக்குற்றம் அவரவர்களுக்குப் புலப்படாது.
- விடுதலை நாளேடு, 22.12.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக