ஞாயிறு, 31 டிசம்பர், 2017

தாசி வீட்டுக்கு போகும் கடவுள் - ஸ்ரீரங்கம் உற்சவம்

தாசி வீட்டுக்கு போகும் கடவுள் - ஸ்ரீரங்கம் உற்சவம் - ஆபாச இந்துமதம்..

இந்த நிகழ்ச்சிக்கு பெயர் பாரிவேட்டை உற்சவம். இன்னொரு பெயர் மட்டையடி உற்சவம் என்றும் சொல்வார்கள். இன்றும் திருக்கண்ணபுரம், சிறீரங்கம், கீழையூர் போன்ற முக்கிய வைணவத் திருத்தலங்களில் இந்த உற்சவத்தை கோலாகலமாகக் கொண்டாடுவார்கள்.

வருடாவருடம் மாட்டுப் பொங்கலன்றும் மறுநாளும் இந்த உற்சவம் நடைபெறும்.

குதிரை வாகனத்தில் கிளம்புகிறார் பெருமாள். மேளதாளம் முழங்குகிறது. நாதஸ்வரம் இசைக்கிறது. குதிரைமீது இரண்டு பக்கமும் கால்களை போட்டுக் கொண்டிராமல் ‘சைக்கிள் கேரியர்’-ல் நாம் உட்கார்ந்து போவோமே அதுபோல் இரண்டு கால்களையும் ஒரே பக்கத்தில் போட்டுக்கொண்டு போகிறார் பெருமாள்.

கொஞ்சதூரம் போன பிறகு... மேளம் நிறுத்தியாகி விட்டது. நாதஸ்வரத்தை எடுத்து அதற்கான துணியுறையில் போட்டு விடுகிறார் வித்வான், ஏன்?

அது தாசிகள் வசிக்கும் தெரு. அங்கே போகும்போது யாருக்கும் தெரியக்கூடாது என்று வாத்தியத்தையும் நிறுத்திவிடுகின்றனர். அங்கே போன பிறகு பெருமாளை இறக்கி வைக்கிறார்கள்.

இது உற்சவத்தில் வரும் காட்சிகள். ஏன் இந்த காட்சிகள்?

பெருமாள் கொஞ்ச தூரத்தில் இருக்கும் தாசிகள் தெருப்பக்கம் போகிறார். இவர் வெளியே போனாரே எங்கே இன்னும் காணோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் பிராட்டி. இரவு ஆகிவிட்டது. ஊரெல்லாம் அடங்கிவிட்டது. அப்படியும் பெருமாள் கோயிலுக்குத் திரும்பவில்லை. இரவு முழுதும் தாசிகளுடன் தங்கியிருந்து அனைத்தையும் முடித்துவிட்டு மறுநாள் காலை ஆசுவாசமாகப் புறப்படுகிறார் பெருமாள்.

மறுபடியும் காலையில் உற்சவம் தொடர்கிறது, அதே குதிரையில் ஏறி... கோயிலுக்கு வருகிறார்.

கோயில் வாசலில் எதிரே வழியை மறித்துக்கொண்டு நிற்கிறார் பிராட்டி.

“எங்கேய்யா போயிட்டு வந்தீர்?” இது பிராட்டியின் கேள்வி.
அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் மறுபடியும் உள்ளே நுழைய மறுபடியும் தடுக்கிறார் பிராட்டி. இருவரும் எதிரெதிரே ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நிற்க, இப்படியே நேரம் ஓடிக் கொண்டிருக்க,  அப்போதுதான் சமாதானத்துக்காக வருகிறார் அங்கே நம்மாழ்வார்.

நம்மாழ்வாரின் சமாதானத்துக்குப் பிறகு பெருமாளை உள்ளே விடுகிறார் பிராட்டி.

இதுதான் அந்த கோவில்களில் நடைபெறும் உற்சவம்.

இந்த உற்சவம் நடக்கும்போது எல்லாரும் கையெடுத்து கும்புடுகிறார்கள்.

இதில் கும்பிட என்ன இருக்கிறது?

கடவுள் என்ற காவலி பயபுள்ள மேட்டர் வீட்டுக்கு போயிட்டு வந்திருக்கு. இதை எப்படி மக்களே முட்டாத்தனமா கும்பிடுறீங்க..? அந்த அளவுக்கா உங்க உங்க மூளை மழுங்கி போயிருக்கு...

இந்து சகோதரர்களே.. உங்க வீட்டுல இப்படி யாராவது போய்ட்டு வந்த இப்படித்தான் கும்பிட்டு கெடப்பீங்களா...
கொஞ்சமாவது அறிவிங்கறது வேண்டாமா....
-டக்ளஸ் முத்துக்குமார், முகநூல் பதிவு, 31.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக