வெள்ளி, 29 டிசம்பர், 2017

பிரம்மன் ஒரு விபச்சாரி

பிரம்மன் ஒரு விபச்சாரி - கேலவங்கெட்ட இந்து மதம் - 2

சாவித்திரி, சரஸ்வதி, காயத்திரி. இந்த மூவருக்கும் கணவன் பிரம்மன்.

தன்னைப்படைத்த சிவனிடம் போய் ‘உன்னைப் படைத்தவன்’ நானடா என்று வீரம்பேசியிருக்கின்றான் இவன். ‘அஞ்சு தலைப் பேர்வழியே அஞ்சாமல், ஆராயாமல் என்ன வார்த்தையடா சொன்னாய்?’ என்றவாறு ஒரு தலையைக் கிள்ளி உதறினான் சிவன்.
மிகுந்ததுதான் நான்கு தலைகள்.

விநாயகனின் மனைவிகளாகக் கூறப்படும் சித்தி, புத்தி இரு வரும் இவனது இன்பப்பாய்ச்சலின் இளம்பயிர்கள் -அதாவதுமகள்கள்.

நடனமாடும் நாரீமணி ஒருத்தி. அவள் பெயர் உருப்பசி. அவளது நடனத்தைப் பார்த்த பிரமனுக்கு பசி உருவானது. அருகில் வர ஆணையிட்டாள். அவள் ஆட்டம் ஓய்ந்து, இவன் ஆட்டம் துவங்கியது.

துள்ளல் – துவளலாய் மாறியதும், சிந்திச் சிதறிய விந்துத் துளிகளைத் திரட்டி, குடம் ஒன்றில் அடைத்தான் பிரம்மன். அக் குடத்தின் விந்து அகத்தியன் என்னும் ஆளாக மாறியது.

அசுவமேத யாகத்தை ஒருமுறை செய்தான். யாகத்தை வேடிக்கை பார்க்கத் தேவர்களின் பத்தினிகளும் வந்திருந்தனர். அந்த அழகிகளின் அழகில் கிளர்ச்சியுற்ற பிரம்மன், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவனானான். வீரியம் பீறிட்டடித்தது. அக்கினிக் குழியில் அந்த விந்துப் பெருக்கினை வார்த்தான். இதிலிருந்து பிறகு, ஆங்கீரசர், அத்ரி, மரீசி, புலஸ்தியர், புலகர் மற்றும் வசிட்டர் ஆகிய தவசிரேஷ்டர்கள் உதித்தனர்.

மாரீசன் என்பவனுக்கு ஆறு பிள்ளைகள் . இந்த ஆறு பிள்ளை களும் சரியான சுட்டிப்பயல்கள். பெற்ற மகளைப் பெண்டாண்ட பெரியவன் என்று இந்தச் சுட்டிப்பயல்கள் பிரம்மனுக்குச் சூடு கொடுத்தனர். கைகொட்டிச் சிரித்தனர். எரிச்சலுற்ற பிரம்மன், “அசுரர்
களாவீர்”எனச் சாபந்தந்து கோபந்தணிந்தான்.

திலோத்தமையைப் படைத்ததும், மோகங்கொண்டு அவளை விரட்டினான். பிடிபடாமல் ஓடினாள் திலோத்தமை. பிரம்மன், அவளைப் பிடித்தானா? நினைத்த கதையை முடித்தானா என்பதன் தகவல்கள் கிடைக்கவில்லை.

சரஸ்வதியுடன் ஒருமுறை ஊடல்கொண்ட பிரம்மன், “பூமியில் பிற புலவனாய்ப் பிழை”எனச் சாபங்கொடுத்தான். அதுவும் ஒரு உருவில் அல்ல ; நாற்பத்தெட்டு உருவில். இந்த நாற்பத்தெட்டு உருவங் கள் தான் சங்ககாலப் புலவர்களாம்.

ஆதாரம் - அபிதான சிந்தாமணி  1133 பக்.
- டக்ளஸ் முத்துக்குமார், முகநூல் பதிவு, 29.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக