செவ்வாய், 26 டிசம்பர், 2017

கிருஷ்ணன் மீது மோகம்கொண்ட கங்கை

கிருஷ்ணன் மீது மோகம்கொண்ட கங்கை - கேவலங்கெட்ட இந்து மதம்..

கிருஷ்ணன் ராதையுடன் கூடிக் குலவிக் களித்துக்கிடந்தபோது, விரஜை, கங்கை புனிதப் பெண்களும் அங்கு வந்தனர்.

கிருஷ்ணனின் லீலையை வைத்த கண் வாங்காமல் இவர்களின் சேஷ்டைகளை பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கும் மோகம் துளிர்விட்டது. கிருஷ்ணனின் தழுவலுக்காக ஏங்கினர்.

இதை எப்படியோ உணர்ந்து கொண்டாள் ராதை. உடனே அவள் கண்ணனை உதறிவிட்டு, அந்தப் பெண்களைப் பார்த்துப் பேசத் தொடங்கி திட்டி தீர்த்தால். விரஜையைக் காட்டிலும் கங்கை ரோஷக்காரி. விடுவிடென அங்கிருந்து மறைந்தாள்.

அவளின் மறைவோடு ஊர் உலகில் நீரோட்டம் அற்றுப்போனது. எங்கெங்கோ உள்ள உயிரினங்கள் எல்லாம் வறட்சி நிலையில் மிரட்சியுற்றுத் தவித்தன.

பிரம்மன் படை ஒன்றைத் திரட்டி, கிருஷ்ண பெருமானிடம் போனான், கங்கையின் மறைவால் காடு மேடெல்லாம் காய்ந்து போனதையும், மாடு மனிதர்கள் ஓய்ந்து போனதையும் எடுத்துக்கூறி விளக்கினான்.

இந்த வேண்டுகோள்களையெல்லாம் செவிமடுத்து கேட்ட கிருஷ்ணன், தன்னால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று கையை விரித்தான். கங்கை வெளிவந்தால் அவளை உறிஞ்சித் துப்பிவிட ராதை துடித்துக் கிடக்கிறாள். எனவே ராதையைப் போய்நீங்களே சமாதானம் செய்யுங்கள். என்னால் எதுவும் நடக்காது என்று கூறிவிட்டான்

பிரம்மனும் அவனின் பின்னோடிகளும் போயும்போயும் இவனை நம்பி இவ்வளவு நேரத்தைப் பாழடித்தோமே என்று குறை கூறியவாறு ராதையிடம் போய் சமாதானம் பேசினர். அவளும் கோபந் தணிந்தாள். பின்னர், கிருஷ்ணனது கட்டை விரலிலிருந்து கங்கை வெளிவந்தாள்...

"இந்த கங்கை தான் சிவன் தலையின் மேலுள்ள சிவனின் வைப்பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.."

(ஆதாரம் – அபிதான சிந்தாமணி பக்கம் 447-450)
- டக்ளஸ் முத்துக்குமார், முகநூல் பதிவு,
27.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக