சனி, 5 டிசம்பர், 2015

நாஸ்திகன் யார்? பெரியார் விளக்கம்


நாஸ்திகன் என்பதற்கு கடவுள் இல்லை என்பவன் என்று பொருள் இல்லை. புராண, இதிகாச, வேத, சாஸ்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களைளே - அவற்றைப் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பவர்களையே பார்ப்பனர்கள் நாஸ்திகர் என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.
இராமா யணத்தில் - பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கும் புத்தர் முதலான வர்களை - பகுத்தறிவைப் பயன்படுத்திய தற்காக - நாஸ்திகர் என்று குறிப்பிட்டிருக் கிறார்கள். இவை இன்று நேற்று ஏற்பட்ட வையல்ல. யார் ஒருவர் பார்ப்பன ஆதாரங் களில் கை வைக்கிறானோ, அவனுக்கெல்லாம் நாஸ்திகப் பட்டம் சூட்டியிருக்கிறார்கள். ராவணன் பெரிய சிவபக்தன். ஆனால், பார்ப்பன ஆதாரங்களை எதிர்த்ததால் நாஸ்திகன் எனப்பட்டிருக்கிறான். அப்படியே இரணியனும்.
- தந்தை பெரியார்
(திருச்சி - பொன்மலையில் தந்தை பெரியார் உரை - 22.09.1956, (விடுதலை - 25.9.1956) தவத்திரு குன்றக்குடி அடிகளார் தந்தை பெரியார் 78ஆவது ஆண்டு பிறந்தநாளில் பங்கு பெற்று பொன்னாடை போர்த்தினார் - விழாக்குழு சார்பில் சமுதாயப் புரட்சி வீரர் எனும் தந்தை பெரியார் உருவம் பொறித்த தங்கப்பதக்கமும் அவ்விழாவில் அளிக்கப்பட்டது.)
-விடுதலை,14.9.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக