விஷ்ணு - கிருஷ்ண அவதாரத்தில் நடத்திய அசுத்தங்களையும், கோபியர்களுடன் செய்த லீலைகளையும், அவர்களுடன் கூடிச் செய்த அக்கிரமங்களையும் மனித மனதைக் கெடுத்து கறையாக்கிய அழுக்குச் செயல்களும் எத்தனை, எத்தனை.
பாகவதம் பத்தாவது ஸ்கந்தம் கோபியரைப் புணர்ந்த அத்தியாயம் 22ஆம் பாடலைக் காணுங்கள்.
பொங்கினர் காவுதோறும் புதுமணற் குன்றுதோறும்
பங்கயச் செங்கண்மாயன் பானிலாப் பயன்கொண்டோங்கு
கங்கயந்திரை வாயுற்ற கனியிள வண்ணம் போலும்
கொங்கை வீழ கோதை மாதர் குழாத்தொடு பாடினானே.
மேய தோகையினமென மயிலான
சாயலார் முலைதழீஇ விளையாடிப்பின்
மாயன் வைகறையில் வண்குளர் தண்டார்
ஆயர் பாடியில்ல டைந்தனன் மன்னோ
(அத்தியாயம் - பாடல் 15 - பாகவதம்)
மயிலின் சாயலொத்த மங்கையருடைய தனங்களைக் கிருஷ்ணன் தழுவி விளையாடிக் கொண்டிருந்து, காலையில் ஆயர் பாடியிற் சேர்ந்தான் என்பதாம்.
இதுதானா ரட்சகனாய்க் கருதப்பட்ட கிருஷ்ண பகவானுடைய அரும்தொழில்? இது காமிகளுக்கேற்றதா? சாமிகளுக்கேற்றதா?
வெள்ளி வெண்முல்லையம் மெல்லினர் துன் றுவிரைக் கோதைக்
கள்ள விழோதியரிற் றோறும் வெண்ணெய் கவர்ந்துண்டோன்
அள்ளிலை வேல்விழியாரமுதம் யுரையஞ்சாயல்
ஒள்ளிழை பச்சிள வேய்புரை தோணல முண்டானே.
(பாகவதம் -39ஆம் பாட்டு)
கோபிகா பெண்களுடன் வீடுகளெல்லாம் வெண் ணெய் திருடிச் சாப்பிட்ட கண்ணன், வேலையொத்த கண்களையும், அழகான சாயலையும், ஒளிமிக்க பூசணங்களையும் உடைய கூனி எனும் பெண்ணோடு புணர்ச்சி செய்தானாம். அடுத்து, தன் குருவான இராயன் கோசு என்றவரின் மனைவி இரதை என்பவளைக் களவாடிப் போய், அவ ளுடன் காட்டில் கூடிப் புணர்ந்தும், பிருந்தாவனத்தில் பல இடச்சியரை ஆலிங்கனம் செய்து, வடமதுரையில் பதினாறாயிரம் பெண்களுடன் லீலை புரிந்தானாம் கிருஷ்ணன்.
இப்படி கண்ணன் செய்த காமுகச் செயல்கள் எத்தனை? கோகுலாஷ்டமி கொண்டாடும் கிருஷ்ணனின் பக்தர் களே சிந்தியுங்கள்!
இரா.கண்ணிமை
விடுதலை,7.9.12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக