புதன், 2 டிசம்பர், 2015

இந்திய மதங்கள்


கிறித்தவர்கள், முஸ்லீம், புத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சிகள் என்றழைக்கப்படுகின்ற மக்கள் பிரிவினரைத் தவிர இந்தியாவிலுள்ள மற்றவர்களெல்லாம் இப்பொழுது இந்துக்கள் என்றே கொள்ளப்படுகின்றனர். வேத காலம் தொடங்கியுள்ள வரலாற்றை உரிமை கொண்டாடுகின்ற ஒரு மதமே இப்பொழுது இந்து மதம். ஆனால், முன்பு ஒரு போதும் இந்த பெயரில் ஒரு மதம் இருந்ததில்லை. ஒவ்வொரு காலத்திலும் இந்தியாவில் உருவான மதங்களையெல்லாம் ஓர் இழையில் கோத்து இணங்க வைத்து ஒரு மதமாக்க நடத்துகின்ற முயற்சிகள் இன்றுவரை வெற்றி பெறவில்லை. இஸ்லாம், கிறித்தவ மதங்கள் புகுந்ததைக் கண்டு மலைத்த இந்தியர்கள் அவர்களுடைய பழைய பகைமையையெல்லாம் மறந்து ஒன்றிணைய முயலுகின்றனர் - அவ்வளவுதான். வைதிக மதம், சைவ மதம், வைஷ்ணவ மதம், புத்த மதம், ஜைன மதம், அத்வைத மதம், கோஸாயி மதம்,  விசிஷ்டாத்வைத மதம், திராவிட மதம், காபாலிக மதம், தாந்தீரிக மதம் எனப்பல மதங்கள் இந்தியாவில் தோன்றின. பிறநாடுகளில் நிகழ்ந்ததைப் போலவே இந்த மதத்தினரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளவும் தாக்குதல் - எதிர்த்தாக்குதல் நடத்தவும் செய்தனர். அதன் பலனாக இவற்றில் பல மதங்களும் அழிந்து விட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக