சனி, 5 டிசம்பர், 2015

சொல்லுவது ஆனந்தவிகடன்!


கேள்வி: மகாபாரதத்தில் கிருஷ்ணன் நினைத்திருந்தால் சில நிமிடங்களில் துரியோதனன் உள்பட கவுரவர்கள் அத்தனை பேரையும் அழித்திருக்கலாம். ஏன் குருசேத்திர போர் வரை செல்ல விட்டார்?
பதில்: முதன் முதலில் எழுதப்பட்ட மகாபாரதத்தின் படி, கிருஷ்ணர் யாதவர்களின் அரசனே தவிர, கடவுள் இல்லை. துரியோதனனிடம் பாண்டவர்களின் பிரதிநிதியாகச் சென்று போர் வேண்டாம் என்று எடுத்துரைக்க மட்டுமே கிருஷ்ணனால் முடிந்தது. அவர் கடவுள் அவதாரமாகக் கருதப்பட்டது, மிகப் பிறபட்ட காலத்தில்தான் . பிறகு கடவுளுக்குரிய அம்சங்கள் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டன. மிகப்பெரிய அளவில் கிருஷ்ணன் வழிபாட்டை முதலில் துவக்கி வைத்த பெருமை வங்காளிகளுக்கே சேரும்.
(ஆனந்தவிகடன், 31.10.2007)
அரசன் கடவுளானது எப்படி? யார் அப்படி ஆக்கினார்கள்? மனிதன்தானே. மனிதன்தான் கடவுளைக் கற்பித்தானே தவிர கடவுள் மனிதனைப் படைக்கவில்லை என்பது இப்பொழுது புரிகிறதா!
-விடுதலை,14.9.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக