வியாழன், 3 டிசம்பர், 2015

கீதை ஒரு கொலை நூல்தான்!


காந்தி கொலை வழக்கில் நீதிபதியே எழுதிய தீர்ப்பு இதோ:
கீதையின் மறுபக்கம் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய நூலிலிருந்து ஒரு முக்கிய பகுதி வருமாறு:
காந்தியார் கொலையும் பகவத் கீதையும்!
இந்திய சுதந்திரத்திற்குப் பொன்விழா - அய்ம்பதாம் ஆண்டு நிறைவு கொண்டாடு கின்ற வேளையில், இந்நாட்டின் தந்தை (Father of the Nation) என்று அழைக்கப்பட்ட காந்தி யார் இந்து மதவெறிக்கு எப் படிப் பலியானார். ஏன் பலியா னார்? என்பதை வேதனையுடன் நினைவுபடுத்திக் கொள்ள நாம் கடமைப் பட்டுள்ளோம்.
125 ஆண்டுகள் வாழவேண் டும் என்று விரும்பியவர் காந்தி அடிகள்; அப்படிப்பட்டவரை, மதவெறி பலிகொண்டது எப்படி? ஏன்? எதன் தாக்கத் தினால் என்பதை உணர்ந்தால், எவ்வளவு கேடான தீயவிளைவு பகவத் கீதையால் உருவாகியுள் ளது என்பது எவருக்கும் எளிதில் விளங்கும்.
‘The Murder of the Mahatma’
மகாத்மாவின் கொலை என்ற தலைப்பில் பஞ்சாப் உயர்நீதிமன் றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.டி.கோஸ்லா அவர்கள் 1963-இல் ஒரு நூல் எழுதி, 1977 வரை மூன்று பதிப்பு களுக்கு மேல் அது விற்பனை யாகியுள்ளது.
அதில் அவர், காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் விநாயக் கோட்சே என்ற மராத் திப் பார்ப்பனர், அவருடைய சகோதரர் கோபால் கோட்சே, அவருக்கு மிகவும் உறுதுணை யாக இந்தக் கொலையில் ஒத்துழைத்த நாராயண் ஆப்தே, தத்தாத்ரேயா இவர்கள் எல்லாம் இந்துமத தர்மத்தின்படிதான் இக் கொலையைத் தாங்கள் செய்யத் துணிந்ததாகவும், பகவத் கீதையின் தாக்கத்தின் விளைவு அது என்றும் தெளிவாக நீதி மன்றத்திலே அளித்த வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். மேற்காட்டிய நூலில் இதை விரிவாக எழுதியுள்ளார் நீதிபதி கோஸ்லா அவர்கள்.
கொலை செய்ததாகவும், கொலை செய்வதற்கான சதியில் ஈடுபட்டதாகவும், ஆயுதங்கள் வெடி பொருள்கள் சட்டத்தின் கீழ்த் தண்டனைக்குரிய குற்றங் களைச் செய்ததாகவும் பின்வரும் எட்டுப் பேர் குற்றம் சாட்டப் பட்டிருந்தனர்.
1. நாதுராம் கோட்சே, வயது 37, ஆசிரியர், ஹிந்து ராஷ்டிரா, புனா.
2.  அவருடைய சகோதரர் கோபால் கோட்சே, வயது 27, ஸ்டோர் கீப்பர், இராணுவ டெப்போ, புனா.
3.  நாராயண் ஆப்தே, வயது 34. நிர்வாக இயக்குநர், ஹிந்து ராஷ் டிரா, ப்ரகாஷம் லிமிடெட், புனா.
4.  விஷ்ணு கர்க்காரே, வயது 37, உணவக உரிமையாளர், அகமத் நகர்.
5.  மதன்லால் பாவா, வயது 20, அகதி முகாம், அகமத்நகர்.
6.  ஷங்கர் கிஷ்டய்யா, வயது 27, வீட்டு வேலையாள், புனா.
7.  தத்தாத்ரேயா பர்ச்சூரே, வயது 49. மருத்துவர், குவாலியர்.
8.  விநாயக் சாவர்க்கர், 65, பார்-அட்-லா, நிலக்கிழார், சொத்து உடைமையாளர், பம்பாய்.
கங்காதர் தந்வதி, கங்காதர் ஜாதவ், சூர்யதேவ் சர்மா ஆகிய மூவரும் தலை மறைவாகி விட்டதாகச் சொல்லப்பட்டது.
1948-ஆம் ஆண்டு ஜூன், 24-ஆம் நாள் சாட்சிகள் விசாரணை தொடங்கப் பட்டது. மொத்தத்தில் 149 சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர்.திகம்பர் பாட்கே என்பவர் அப்ரூவராக மாறிச் சாட்சிய மளித்தார். சாட்சிகள் விசாரணை நவம்பர் 6-ஆம் நாள் நிறைவடைந்தது.
1949-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் நாள் தீர்ப்பு வழங்கப் பட்டது.குற்றம் சாட்டப்பட்டவர்களில் சாவர்க்கர் விடு விக்கப்பட்டார். நாதுராம் கோட்சே, அவரது நண்பர் நாராயண் ஆப்தே ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப் பட்டது. தண்டனை பெற்ற ஏழு பேரின் சார்பாகப் பஞ்சாப் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
தனக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை குறித்துக் கோட்சே எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை. கொலை செய்வதற் கான சதி நடைபெற்றது என்பதை மறுப்ப தாகவே கோட்சேயின் மேல்முறையீடு அமைந் திருந்தது. காந்தியின் கொலைக்குத் தான் மட்டுமே பொறுப்பு என்றும் வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லையென்றும் கோட்சே உறுதியாகத் தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத்தில் 1949-ஆம் ஆண்டு, மே 2-ஆம் நாள் மேல் முறை யீட்டின் மீதான விசாரணை தொடங் கியது. தனக்காக வழக்குரைஞர் வாதாடு வதை நாதுராம் கோட்சே ஏற்றுக் கொள்ளவில்லை. தனக் காகத்தானே வாதாடுவதற்கு அனுமதிக் குமாறு நாதுராம் கோட்சே கேட்டுக் கொண்டார். நாதுராம் கோட்சேயின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வழக்கறிஞர் வைத்து வாதாடும் அளவுக்கு வசதி இல்லாத ஏழை என்று கோட்சேயைப் பற்றிச் சொல்லப்பட்டது உண்மையல்ல; துணிச்சல் நிறைந்த  தேச பக்தன் என்றும் இந்துமதக் கொள்கையில் வெறியுடையவன் என்றும் தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தனக்கு வழக்கறிஞர் தேவை யில்லை என்று அவர் தெரிவித்தார் என்பதுதான் உண்மை.
இந்துப் பண்பாட்டையும் இந்துக்களி டையே ஒற்றுமையை யும் காப்பதற்கு உறுதிபூண்ட ஓர் அமைப்பாகிய ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.) நாதுராம் கோட்சே தனது 22-ஆம் வயதில் சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு புனாவில் குடியேறினார். அங்கிருந்த போது இந்து மகாசபையின் உள்ளூர்க் கிளைச் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்தார். அய்தராபாத் நிஜாமின் முஸ்லிம் அரசு இந்துக்களின் உரிமை களைப் பறிப்பதாகச் சொல்லப்பட்டு அதனால் நடைபெற்ற ஒத்து ழையாமை இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார்.அதற்காகக் கைது செய்யப்பட்டுச் சில காலம் சிறைத் தண்டனையும் பெற்றி ருந்தார்.
இப்பொழுது நாதுராம் கோட்சே இந்து மதம் சார்ந்த அரசியலில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். நாட்டு வரலாறு, சமுதாய வரலாறு ஆகியவற்றை ஆழமாகப் படித்தார். ஏற்றுக் கொண்ட கொள்கைக்காகத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ள முடிவு செய்தார். பூனாவிலிருந்தபோது நாராயண் ஆப் தேயைக் கோட்சே சந்தித்தார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண் டிருந்த ஆப்தே அகர்னி என்ற செய்தித் தாளைத் தொடங்கினார். அகர்னி என்ற பெயர் பின்னாளில் ஹிந்துராஷ்டிரா என்று மாற்றப்பட்டது. முஸ்லிம்களுக்கு இணக்க மாகக் காந்தியார் பேசியதையும் ஜின்னாவின் கோரிக்கைகளுக்குக் காந்தியார் இணங்கிப் போவதையும் கோட்சே கடுமையாக எதிர்த்தார்.
கோட்சே கீதையைப் படித்திருந்தார்
“Godse had made a study of Bhagawad gita and knew most of its verses by heart. He liked to quote them to justify acts of violence in pursuing a righteous aim.”
(The Murder of The Mahatma P.  274)
கோட்சே பவகத் கீதையைப் படித்தி ருந்தார்; அதன் பெரும்பாலான சுலோகங் களை மனப்பாடமாக அறிந்திருந்தார். நல்ல குறிக்கோளை அடைவதற்காகச் செய்யப்படு கின்ற வன்செயல்களை நியாயப்படுத்துவ தற்கு அவற்றை மேற் கோளாகக் காட்டுவதில் அவர் விருப்பம் கொண்டிருந்தார். (மகாத் மாவின் கொலை பக். 274)
நாதுராம் கோட்சே கொடுத்த வாக்குமூலம் தான் எங்கள் முன்னிருந்த மேல்முறையீட்டின் முக்கியமான அம்சமாக இருந்தது. அவர் பல மணி நேரம் பேசினார்; முதலாவதாக அந்த வழக்குப்பற்றிய உண்மை விவரங்களை எடுத்துரைத்தார். கீழ் நீதிமன்றத்தில் அவர் எழுத்து மூலம் கொடுத்திருந்த வாக்கு மூலத்தைப் பின்பற்றியே அவரது பேச்சு அமைந் திருந்தது. அவருடைய வாக்குமூலத் திலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் பகுதிகள் அவருடைய கருத்துகளையும் மனநிலை யையும் காட்டுவதாக இருக்கும். நான் பக்தி நிறைந்த ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தேன். இயல்பாகவே இந்து மதம், இந்து வரலாறு, இந்துப் பண்பாடு ஆகியவற்றில் மரியாதை கொண்டிருந்தேன். மொத்தத்தில் இந்துத்துவம் (ழனேரனடிஅ) பற்றி மிகுந்த பெருமை கொண்டிருந்தேன்.......
தாதாபாய் நவ்ரோஜி, விவேகானந்தர், கோகலே, திலகர் ஆகியோருடைய நூல் களைப் படித்திருந்தேன். இந்தியாவின் பழங்கால வரலாற்றையும் இக்கால வரலாற் றையும் படித்திருக் கிறேன். இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா, ரஷியா போன்ற உலகின் முதன்மை நாடுகளின் வரலாற் றையும் படித்திருக்கிறேன். அது மட்டுமல்ல சோஷலிசம்,  கம்யூனிசம் தொடர்பான நடப்பியல் கோட்பாடுகள் பற்றியும் கூடப் பொறுமையுடன் படித்தேன். இவை அனைத் தையும்விட, வீரசாவர்க்கர், காந்திஜி ஆகிய இருவருடைய எழுத்து களையும் பேச்சுகளை யும் மிக ஆழமாகப் படித்தேன். கடந்த 50 ஆண்டுகளில் வேறு எவரையும்விட இந்த இருவருடைய கருத்துகள் தான் நவீன இந்தியாவின் சிந்தனைகளையும் செயல்பாடு களையும் வடிவமைப்பதில் பெரும் பங்காற்றி இருக்கின்றன.
காந்திக்கு நிரூபித்துக்காட்டி
இத்தனை படிப்பும் அதனால் எழுந்த சிந்தனையும் இந்துத் துவத்திற்காகவும் இந்து மக்களுக்காகவும் தேசபக்தன் என்ற முறையிலும் மனிதாபிமானி என்ற அடிப்படை யிலும் தொண்டாற்றுவதே எனது முதல் கடமை என்பதை எனக்கு உணர்த்தின. மனித குலத்தில் அய்ந்தில் ஒரு பகுதியாக உள்ள 30 கோடி இந்துக்களின் உரிமைகளையும் நலன் களையும் பேண வேண்டாமா? இந்த உறுதிப்பாடு இயல்பாகவே என்னைப் புதிய இந்துச் சங்கத்தின் கோட்பாடுகளிலும் திட்டங்களிலும் ஈடுபாடு  கொள்ளச் செய்தது. என்னுடைய தாய்நாடாகிய இந்துஸ்தானத் தின் தேசிய சுதந்திரத்தை இந்துச் சங்கத் தின் திட்டங்கள் மட்டுமே வென்றெடுக்க முடியும் என்று நம்பத் தொடங்கினேன்.
1946-ஆம் ஆண்டளவில் சுராவர்த்தி அரசின் ஆதரவுடன் நவகாளியின் இந்துக்கள் மீது முஸ்லிம்கள் தொடுத்த கொடிய தாக்குதல் எமது இரத்தத்தைக் கொதிப் படையச் செய்தது. அவமான உணர்ச்சியும் ஆற்றொணாச் சீற்றமும் எங்களுக்கு ஏற் பட்டன. பிரார்த்தனைக் கூட்டங்களிலும்கூட அந்தச் சுராவர்த்தி யின் குற்றங்களை மறைக்கவும் அவரைத் தியாகி என்று காட்டவும் காந்திஜி முன்வந்தார். அது மட்டுமல்ல, நவகாளியி லிருந்து தில்லி வந்தபிறகு, பங்கிக் குடியிருப்பில் உள்ள ஓர் இந்துக் கோயிலில் காந்திஜி பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தத் தொடங்கினார். இந்துக் களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அந்தக் கோவிலில் குரானிலிருந்து சில பகுதிகளைப் படிக்குமாறு வற்யுறுத்தினார். முஸ்லிம்களின் எதிர்ப்பை மீறி, ஒரு மசூதியில் பகவத் கீதையைப் படிக்க அவர் துணிய மாட்டார். அப்படிச் செய்தால் அங்கே முஸ்லிம் களின் எதிர்ப்பு எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால், சகிப்புத் தன்மையுள்ள இந்துக் களின் உணர்வுகளைத்தான் அவரால் நசுக்க முடிந்தது. இந்துக்களும் கூட அவர் களுக்கு அவமரியாதை செய்யப்பட்டால் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதைக் காந்திக்கு நிரூபித்துக்காட்ட உறுதி கொண்டேன்.
பஞ்சாபிலும் இந்தியாவின் பிற பகுதி களிலும் முஸ்லிம்களின் பயங்கர வெறி யாட்டம் தொடர்ந்து, பீகார், கல்கத்தா, பஞ்சாப் முதலிய இடங்களில் முஸ்லிம் களின் வெறி யாட்டத்தைத் தடுக்க ஏவியது; கைது செய்தது; சுட்டுத்தள்ளியது. எங்களது அச்சம் உண்மை யாகிக் கொண்டு வருவதாகத் தோன் றியது. பஞ்சாப் முழுவதும் முஸ்லிம்களால் தீவைக்கப்பட்டு, இந்துக்களின் இரத்தம் ஆறாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் 1947-ஆகஸ்ட்-15ஆம் நாள் கோலா கலமாகக் கொண்டாடப்பட்டது. எங்க ளுக்கு எவ்வளவு துன்பத்தைத் தருவதாக - எங்களை அவ மரியாதை செய்வதாக இருந்திருக்கும்? என்னுடைய தூண்டுதலால் இந்து மகா சபைக்காரர்கள் அந்தக் கொண்டாட்டங் களையும் காங்கிரஸ்காரர்களின் அரசாங் கத்தையும் புறக்கணிப்பதென்று முடிவு செய்தோம். முஸ்லிம்களின் வன்முறைத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடத் திட்டம் வகுத்தோம்.
இந்திய முஸ்லிம்கள் அய்ந்து கோடிப் பேர் இந்த நாட்டுக்காரர்கள் அல்லர் என்று ஆயினர்; மேற்குப் பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் பலநூறு ஆண்டுகளாகத் தாங்கள் வாழ்ந்த இடங்க ளிலிருந்து வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப் பட்டனர். அல்லது கொடூரமாகக் கொன்று குவிக்கப் பட்டனர். 110 மில்லியன் மக்கள் அவர்களது வீடுகளிலிருந்து வெளியே வீசி எறியப்பட்டனர். அவர்களில் 4 மில்லியன் மக்கள் முஸ்லிம்கள் இத்தகைய பயங்கரமான விளைவுகளுக்குப் பிறகும் காந்திஜி முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்ததைத் கண்டேன்; என்னுடைய குருதி கொதித்தது; இனியும் அவரை என்னால் சகித்துக் கொண் டிருக்க முடியாது.
தனிப்பட்ட முறையில் காந்திஜிக்கு எதிராகக் கடுமையான சொற்களைப் பயன் படுத்த விரும்பவில்லை; அதே நேரத்தில், அவரது கொள்கைகள், வழிமுறைகள் ஆகிய வைபற்றிய எனது அதிருப்தியை மறைக்கவும் விரும்பவில்லை. பிரிட்டிஷார் எப்பொழுதும் மேற்கொண்டிருந்ததைப் போல பிரித்தா ளுதல் என்ற கொள் கையை நிறைவேற்று வதில் காந்திஜி வெற்றி பெற்றுக்கொண்டி ருந்தார். பிரிட்டிஷாரின் ஆட்சி முடியப் போகிறது என்பது உறுதி செய்யப்படாத நிலையில் காந்திஜி இந்தியாவைப் பிளப்பதில் பிரிட்டீ ஷாருக்கு உதவியாக இருந்தார்.
முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் காந்திஜி கடைசி உண்ணா நோன்பை மேற் கொண்ட போது, 32 ஆண்டுகளாக என்உள்ளத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த எதிர்ப்புணர்ச்சி, காந்திஜியின் வாழ்வை உடனடியாக முடித்து விட வேண்டும் என்ற முடிவுக்கு என்னைத் துரத்தியது. இந்தியாவுக்குத் திரும்பியபோது, சரியானது எது தவறானது எது என்பதை இறுதியாக முடிவு செய்யும் நீதிபதி அவர் ஒருவரே என்ற மனோபாவத்தை அவர் உருவாக்கி வளர்த்தார். நாடு அவரது தலைமையை விரும்பினால், அவர் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளவில்லையானால் காங்கிரசிலிருந்து வெளியேறி தனிப்பட்ட முறையில் அவர் விருப்பப்படிச் செயல் படுவார். இந்த மனப்பான்மைக்கு எதிராக அரைகுறையான முடிவு ஒன்று இருக்க முடியாது. அவருடைய விருப்பத்திற்குக் காங்கிரஸ் இணங்க வேண்டும்; அவருடைய கிறுக்குத்தனம், விருப்பு வெறுப்புத் தத்துவங்கள், முதிர்ச்சிய டையாத கோட் பாடு ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு காங்கிரஸ் அவருக்குப் பின்பாட்டுப் பாட வேண்டும் அல்லது அவரைப் புறக் கணித்துக் காங்கிரஸ் தனித்துச் செயல்பட வேண்டும்.
எல்லாவற்றையும் முடிவு செய்யும் நீதிபதியாக அவர் மட்டுமே இருந்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் காரண கர்த்தாவாக அவர் இருந்தார். அந்த இயக்கத்தின் உள்நோக்கம் என்ன என்பது எவருக்கும் தெரியாது. அதை எப்பொழுது தொடங்க வேண்டும்; எப்பொழுது முடிக்க வேண்டும் என்பது அவர்க்கு மட்டுமே தெரிந் திருந்தது. அந்த இயக்கம் வெற்றி பெற்றி ருக்கலாம் அல்லது தோல்வியடைந்திருக்க லாம். அது சொல்லொணாத் துயரங்களையும் அரசியல் பின்னடைவுகளையும் தந்திருக்க லாம்; ஆனால், அது மகாத்மாவின் கொள்கைப் போக்கில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை.
ஒரு சத்தியாக்கிரகி ஒருபோதும் தோற்ப தில்லை என்று சொல்வதை அவருடைய தோல்விகளுக்கான சூத்திரமாக ஆக்கிக் கொண்டார். ஒரு சத்தியாக்கிரகி என்பவன் யார் என்பது அவரைத்தவிர யாருக்கும் தெரியாது. இவ்வாறு, காந்திஜி அவரு டைய நடிவடிக்கைகளுக்காக வாதாடுபவராகவும் தீர்ப்பளிக்கும் நீதிபதியாகவும் அவரே விளங் கினார். இத்தகைய குழந்தைத் தனமான, அர்த்தமற்ற பிடிவாதங்களும் மிக மிக எளிமையான வாழ்க்கை முறையும் இடை விடாத உழைப்பும் பாராட்டத்தக்க தனி மனிதப்பண்புகளும் ஒன்றிணைந்து காந்தி ஜியை மரியாதைக் குரியவராகவும் வலிமை வாய்ந்தவராகவும் உருவாக்கி விட்டன.
அவருடைய அரசியல், அறிவுக்குப் பொருந்தாத ஒன்று என்று பலர் நினைத் தார்கள்; அப்படி நினைத்தவர்கள் காங்கிர சிலிருந்து விலகிக் கொண்டவர்களாக இருந் தார்கள்; அல்லது தங்கள் அறிவு ஆற்றலை யெல்லாம் அவர் காலடியில் வைத்து விட்டு அவர் விருப்பப்படியே செய்யட்டும் என்று கருதியவர்களாக இருந்தார்கள். அத்தகைய, முற்றிலும் பொறுப்பற்ற நிலையில், காந்திஜி தவறுக்குமேல் தவறு செய்த - தோல்விக்கு மேல் தோல்வியைக் கண்ட - அழிவுக்கு மேல் அழிவைக்கண்ட குற்றத்திற்கு ஆளானார். அரசியலில் தலைமையிடத்திலிருந்த 33 ஆண்டுகளில், ஒரேயொரு அரசியல் வெற்றியைப் பெற்ற தாகக்கூட அவர் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.
காந்திய வழிமுறைகள் உச்சத்தில் இருந்த காலம் வரையில், விரக்தி மட்டுமே தவிர்க்க முடியாத விளைவாக இருந்தது. தனி ஒருவருடைய அல்லது ஒரு குழுவி னருடைய புரட்சிகரமான, ஆழமான, தீவிரமான நடவடிக்கைகளை அவர் எதிர்த்துக் கொண்டே இருந்தார். அவருடைய இராட்டி னத்தையும், அகிம்சை, சத்தியம் ஆகிய வற்றையுமே பெரிதாகக் காட்டிக் கொண்டி ருந்தார்.
காந்திஜியின் 34 ஆண்டுக் காலத் தீவிர முயற்சிக்குப் பிறகு இராட்டினம், 200 சதவீதம் இயந்திரங்களால் இயங்குகிற நெசவுத் தொழிலாக விரிவடைந்து விட்டது. அகிம்சையைப் பொறுத்தவரை, 40 கோடி மக்களும் அந்த வழியை ஏற்று வாழ்வார்கள் என்று எதிர்பார்ப்பது மடத்தனமானது. 1942-இல் அந்த அகிம்சை உடைந்து நொறுங்கி விட்டது. சத்தியம் என்பதைப் பொறுத்தவரை, தெருவில் திரிகின்ற ஒரு சாமானிய மனிதனிடம் காணப்படுகின்ற சத்தியத்தை விடக் காங்கிரஸ்காரர்களிடம் காணப்படும் சத்தியம் உயர்வானதல்ல; அவர்களிடம் நாம் காண்பது சத்தியத்தால் மூடப்பட்ட அசத்தியத் தைத்தான்.
காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கோட்பாடு, மனச்சாட்சியின் குரல் என்பவை ஜின்னாவின் இரும்பு போன்ற உறுதிப் பாட்டின் முன்னால் உடைந்து நொறுங்கி விட்டன; அவையெல்லாம் ஆற்றல் அற்றவை என்பது நிரூபணமாகி விட்டது. அவருடைய ஆத்ம சக்தியால் ஜின்னாவை ஆட்கொள்ள முடியவில்லை என்று அறிந்து கொண்ட நிலையில், காந்திஜி அவருடைய கொள் கையை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும்; அல்லது அவருடைய தோல்வியை ஒத்துக் கொண்டு முஸ்லிம் லீகையும் ஜின்னாவையும் எதிர் கொள்வதற்கு வேறுபட்ட அரசியல் வழிமுறைகளுடன் அடுத்தவர்களை அனு மதித்திருக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு நடந்து கொள்ளும் அளவுக்கு காந்திஜி நேர்மையானவராக இல்லை. தேசிய நலனுக்காகக்கூடக் காந்திஜி அவருடைய தன்மூப்புத்தனத்தை (நுபடிளைஅ) அல்லது தான் என்ற அகந்தையை விட்டுவிட மறுத்தார். இவ்வாறான அவரது இமாலயத் தவறுகளால் நடைமுறை அரசியலுக்கு இடமில் லாமல் போய்விட்டது. தனிப்பட்ட முறையில் என்னை அறிந்த வர்கள், நான் அமைதியான போக்கு உடையவன் என்பதை அறிந்திருக்கின் றார்கள். ஆனால், காந்திஜியின் ஒப்புதலோடு காங்கிரசின் முன்னணித் தலைவர்கள், நாங்கள் வழிபடு தெய்வமாகக் கருதுகிற இந்த நாட்டைப் பிரித்துச் சிதைத்தார்கள் என்றபோது, என்னுடைய உள்ளம் கோபச் சிந்தனை களால் நிறைந்துவிட்டது.
காந்தியை கொல்வதால்
சுருக்கமாகச் சொல்வதானால், நான் காந்திஜியைக் கொல்வதால், என் உயிருக்கும் மேலாக மதிக்கின்ற என்னுடைய கவுரவத்தை நான் இழக்க வேண்டியிருக்கும்; வெறுப்பைத் தவிர மக்களிடமிருந்து வெறெதையும் நான் எதிர்பார்க்க முடியாது; நான் முழுமையாகச் சிதைக்கப்பட்டு விடுவேன் - என இவை அனைத்தையும் எனக்கு நானே எண்ணிப் பார்த்தேன். ஆனால் இதே வேளையில், காந்திஜி இல்லாத இந்திய அரசியல், நடைமுறை சாத்தியமானதாக, பதிலடி கொடுக்கத் தக்கதாக, ஆயுத சக்திகளுடன் கூடிய ஆற்றல் மிகுந்ததாக இருக்கும் என உறுதியாக நம்பினேன். என்னுடைய எதிர் காலம் முழுமையாகப் பாழாகிவிடும்; ஆனால், பாகிஸ்தானின் ஊடுருவலிலிருந்து நாடு காப்பாற்றப்படும்; இதில் அய்யப்படுவதற்கு எதுவுமில்லை.
மக்கள் என்னை அறிவில்லாதவன் என்றோ முட்டாள் என்றோ அழைக்கலாம். ஆனால், வலிமையானதாகத் தேசம் உரு வாவதற்குத் தேவையென நான் நினைக் கின்ற அறிவார்ந்த வழிமுறை களைக் கடைப் பிடிப்பதற்கு உரிய உரிமை கிடைத்துவிடும். இதைப்பற்றியெல்லாம் முழுமையாக எண்ணியபிறகு நான் இறுதியாக முடிவெடுத் தேன்; ஆனால், எனது முடிவைப் பற்றி நான் யாரிடமும் பேசவில்லை. என் இருகைகளிலும் துணிச்சலைத் தேக்கினேன்; பிர்லா மாளிகையில், பிரார்த்தனைத் திடலில் 1948, ஜனவரி 30-ஆம் நாள் துப் பாக்கியால் காந்திஜியைச் சுட்டேன்.
இனி, நான் சொல்வதற்கு எதுவும் இல்லை; ஒருவன் அவனுடைய தேசத்திடம் பக்தி செலுத்துவது பாபம் என்றால் நான் செய்தது பாபம்தான். அது பெருமைக் குரியது என்றால் அந்தப் பெருமை எனக்கு உண்டு என்பதைப் பணிவுடன் தெரி வித்துக் கொள் கிறேன். மனிதர்களால் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்திற்கு அப்பால் வெறொரு நீதி மன்றம் இருக்கு மானால் அங்கு என்னுடைய செயல் அநீதியானது என்று சொல்லப்பட மாட்டாது என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. சாவுக்குப்பிறகு செல்வதற்கு அப்படிப்பட்ட ஓர் இடம் இல்லை என்பதால் அதைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. மனித குலத்தின் நன்மையைக் கருதியே அந்தச் செயலை நான் செய்ய நேர்ந்தது. இலட்சக்கணக்கான இந்துக் களுக்கு அழிவைத் தருகின்ற கொள்கையைக் கொண்டிருந்த ஒருவரைத்தான் துப்பாக்கி யால் நான் சுட்டேன்.
இந்துஸ்தான் என்று சரியாக அறியப்பட்ட இந்த நாடு மீண்டும் ஒன்றாக இணையட்டும்; ஆதிக்க சக்திகளுக்கு அடிமைப்படுகின்ற தோல்வி மனப் பான்மையிலிந்து விடுபட மக்கள் பயிற்றுவிக்கப்படட்டும்; எல்லாம் வல்ல இறைவனிடம் நான் கடைசியாகப் பிரார்த் திப்பது இதுதான். எல்லாப் பக்கங்களிலி ருந்தும் எனக்கு எதிராகச் செய்யப்படுகின்ற விமர்சனங்களால் எனது செயலில் நியாயத்தன்மை கலைந்துவிடாது என்பது என் நம்பிக்கையாகும். வரலாறு எழுதுவோர் எனது செயலில் உள்ள நியாயத்தைச் சரியாகவே மதிப்பிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. -இவ்வாறு கோட்சே உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் தனது வாக்கு மூலத்தைக் கூறிமுடித்தார்.
கீதை ஒரு கொலை நூல்தான்
“His main theme however. was the nature of a righteous man’s duty, his dharma as laid down in the Hindu scriptures. He made moving references to historical events and delivered an impassioned appeal to Hindus to hold and preserve their motherland and fight for it with their very lives. He ended his peroration on a high note of emotion, reciting verses from Bhagawadgita”
இந்துமதச் சாத்திரங்களில் சொல்லப் பட்டபடி நடந்து கொள்வதுதான் நல்ல மனிதன் ஒருவனுடைய கடமை - தர்மம் ஆகும் என்பதே (கோட்சே அளித்த வாக்கு மூலத்தின்) அடிப் படையாக இருந்தது. உள்ளத்தைத் தொடும் வகையில் வரலாற் றுச் சான்றுகளை அவர் மேற்கோளாக எடுத்துக் காட்டினார். தாய்நாட்டைக் காக்க வேண்டும்; தாயகத்தைக் காப்பதற்காக உயிரைக் கொடுத்துப் போராட வேண்டும் என்று இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பகவத் கீதையிலிருந்து சில சுலோகங் களைச் சொல்லி உணர்ச்சி கரமாகத் தனது உரையை முடித்தார்.
அர்ச்சுனன் பல கொலைகளைப் புரிவ தற்குத் தூண்டு கோலாய் இருந்தது கீதை. அக்காலத்தில் மட்டுமல்ல நம் கண் ணெதிரே -நிகழ்காலத்தில் தேசப்பிதா என வர்ணிக்கப்பட்ட காந்தியாரையும் பலி வாங்கிய கீதை ஒரு கொலை நூல்தான் என்பதில் அய்யமில்லை.
-விடுதலை,22.12.11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக