புதன், 2 டிசம்பர், 2015

தமிழர் திருமணத்தில் தேவையில்லாச் சடங்குகள்!


திருமணத்தில் நம் நாட்டிற்கும், நம் கொள்கைகளுக்கும், பகுத்தறிவிற்கும், தன்மானத்திற்கும் பிடித்தமில்லாத பல சடங்குகள் அனாவசியமாகப் பார்ப்பனப் புரோகிதருக்கு அரிசியும், பணமும் மற்றப் பொருள்களும் கிடைப்பதற்காகவே செய்யப்படுகின்றன. மணவினையின் தொடக்கத்தில் மணமகன் பரதேசம் போவதும், நிறைகுடப் பூசையும் ஏமாற்று வித்தைகள் ஆகும். பிள்ளையார் பூசை, நவக்கிரக பூசை ஆகியவை தமிழர்க்கு முரணான செயல்கள்.
பகலில் காணமுடியாத அருந்ததி நடத்திரத்தை பார் என்று மணமகன் மணமகளுக்குக் காட்டுவதும், மணமகளின் காலைத்தூக்கி மணமகன் பந்தலில் வைக்கப்பட்டுள்ள அம்மியின் மீது வைப்பது ஆன அறிவற்ற ஆபாச சடங்குகளைச் செய்யக்கூடாது.
எரி ஓம்பல் அவசியம் இல்லாத சடங்கு உலர்ந்த தருப்பை புல்லையும், சமித்து என்று சொல்லப்படும் ஆல்வேல் அத்தி மா முதலிய மரங்களின் சுள்ளிகளையும் கொளுத்தி அதில் நம்நாட்டு மக்களின் பெரும்பாலோர் சுவைத்தே அறியாத அருமையான நெய்யைக் கொட்டி புகையை உண்டாக்கித் திருமணத்தைக் காண வந்திருப்பவர்களின் கண்களுக்கு தொந்தரவுக் கொடுப்பதுதான் ஓமம் வளர்த்தலின் பயன் இம்மாதிரி அக்கினியை போற்றுவதும் பூசிப்பதும் பனியும் குளிரும் அதிகமாகயுள்ள மத்திய ஆசியாவில் உடைகள் இன்றி வெற்றுடம்புடன் வாழ்ந்திருந்த ஆரியர்கட்குத்தான் தகும். உஷ்ண நாடான இந்தியாவில் ஒரே இடத்தில் தங்கி வசித்து வந்த தமிழர்கட்கு அக்கினியை ஒரு தெய்வமாகக் கொள்வது அவசியமில்லை.
(ஆதாரம்: பேராசிரியர் அ.கு.பாலசுந்தரனார் எழுதிய தமிழர் திருமண முறைகள் என்னும் நூலில் பக்கம் 3, 4, 14, 15, 23) தொகுப்பு:  வை.மு. கும்பலிங்கன், குடந்தை
-விடுதலை,15.6.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக