சனி, 5 டிசம்பர், 2015

மகர தீபம் மோசடி - கேரள அரசே ஒப்புதல்


மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுவது - இயற்கையானதல்ல என்பதை வலியுறுத்தி தடை செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கேரள அரசின் சார்பில் திருவாங்கூர் தேவசம் போர்டு செயலாளர் ஆர்.அனிதா தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
மகர சங்கராந்தி நாளன்று பொன்னம் பலமேடு பகுதியில் வானத்தில் தெரியும் மகர ஜோதி ஒரு நட்சத்திரம்; அது இயற்கையாக தோன்றக் கூடியதே! மனிதர்களால் ஏற்றப்படுவது அல்ல.
ஆனால், மகர ஜோதி வானத்தில் தோன்றும் அதே நேரத்தில் பொன்னம் பலமேட்டில் சிறப்பு தீபாராதனை நடைபெறும். அப்போது மகரதீபம் பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுகிறது. அது மனிதர்களால் ஏற்றப்படுவது தான். அதைத்தான் பக்தர்கள் மகரஜோதி என்று கும்பிட்டு வருகிறார்கள்.
காலம் காலமாக இது நிகழ்கிறது. அந்த மகர ஜோதி தெய்வீகமானது என்று நாங்கள் (தேவசம் போர்டு) கூறியதில்லை. மகர ஜோதி பக்தர்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம் என்பதால் மகர ஜோதி ஏற்றப்படுவதை தடை செய்ய முடியாது.
(விடுதலை, 26.4.2011)
-விடுதலை,14.9.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக