செவ்வாய், 8 டிசம்பர், 2015

இயேசு சிலையில் ரத்தம் வடிகிறதாம்! ஓ பாசிட்டிவா? நெகட்டிவா?



சென்னை சேத்துப்பட்டு புனித அன்னாள் மேல் நிலைப்பள்ளியில் சிலுவையில் அறைந்த நிலையில் இயேசு சிலை உள்ளது. இந்த சிலையின் கால், கை மற்றும் கழுத்துப் பகுதியில் இருந்து புதன்கிழமை மாலை 3 மணியளவில் ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்த கன்னி யாஸ்திரிகள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. உடனே பொதுமக்கள் கூட்டம் கூடத் தொடங்கியதை அடுத்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டனர். அப்போது (5 காயங்கள்) மற்றும் சிலை பகுதியில் ரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் பரவச மடைந்தனர். அங்கு சிறப்பு பிரார்த் தனை செய்து சென்றனர். சிலையில் ரத்தம் வடிந்த தகவல் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பரவி யுள்ளது. வெளியூர்களில் இருந்து கிறிஸ்தவர்கள் வேன், பஸ் மூலமாக சேத்துப்பட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ரத்தம் வடிந்த தாக கூறப்படும் ஏசு சிலை முன்பு கூட்டம் கூட்டமாக நின்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு செல்கின்றனர். செல்போன்கள், வீடியோ காமிராக்களிலும் ஏசு சிலையை படம் எடுத்து சென்றனர். இதனால் சேத்துப் பட்டு, கிறிஸ்தவ ஆலய வளாகம் பரபரப்பாக காணப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இயேசு சிலையில் வடியும் ரத்தத்தை என்ன வகை (குரூப்) ரத்தம் என்று பரிசோதனை செய்து அறிவிப்பதற்கான அரிய வாய்ப்பு அல்லவா இது! இதே போல் உலகம் முழுக்க இயேசு சிலையின் கண்ணில் இருந்து வழியும் ரத்தங்களையும் பரிசோதித்து ஒப்பு நோக்கலாம். அதன் மூலம் இயேசு வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரமாக வும் இதைப் பயன்படுத்தலாம். வழக்கமாக இயேசு ரத்தம் என்று ஒயினை வழங்கிக் கொண்டிருக்கும் மோசடிக்கு விடை கொடுத்து, எந்த குரூப் ரத்தமோ அதில் நனைத்து அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கலாம். ஏற்கெனவே உலகின் ரத்தக் கொடை ஞராக இருக்கும் ஓ பாசிட்டிவ் வகை ரத்தமாக இருக்கலாம் என்று சிலர் கருதுவதையும் சரி பார்த்துக் கொள்ளலாம்.
http://wiki.answers.com/Q/What_was_the_blood_group_of_Jesus_Christ?)
What was the blood group of Jesus Christ?
Answer: From analysis of the shroud of Turin, some people have said that Jesus was a type O- blood type (which is the universal donor), but it would be difficult or even impossible to confirm.
அப்படியே கன்னி மேரி கண்களி லிருந்து ரத்தம் வடிவதாக சொல்லப் படும்போதும் இதைப் பின்பற்றலாம். தாய்க்கும் மகனுக்கும் என்ன வகை ரத்தம் என்பது தெரிந்தால், அது மனித ரத்தமா அல்லது தேவ ரத்தமா என்பது தெரியக்கூடும். இந்த ரத்தம் எப்போது உற்பத்தியானது என்பதையும் கூட அறியும் வாய்ப்பு ஏற்படலாம். எப்படியும் குறைந்தது 1981 (கி.பி.2014- இயேசு மறையும் போது அவரது வயது 33)  ஆண்டுகள் பழமையான ரத்தம் கிடைப்பது வரலாற்று, அறிவியல் அபூர்வம் அல்லவா? இந்த அரிய வாய்ப்பை நழுவ விடலாமா? பரி சோதனைக்கு நாங்கள் தயார்! இயேசு வுக்கு வசதி எப்படி?
-விடுதலை ஞா.ம.,8.2.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக