செவ்வாய், 13 நவம்பர், 2018

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்- 1



காட்சி - 1


இருண்ட வானம்


(இடி மின்னலுடன் காற்று பலமாக அடிக்கிறது. இந்த பேரிரைச்சலுக்கிடையே ஏதோ, குரல் கேட்டுக் - கொண்டிருந்தது.)

ஆண்டவன்: நீதிதேவா! நீதிதேவா! (பதில் ஏதும் இல்லை . மீண்டும் அதிகார தொனியில் அழைக் கிறார்)

ஆண்டவன்: நீதிதேவா! நான் அழைப்பது உன் காதில் விழவில்லையா? நீதிதேவா! - (நீதிதேவன், முன்வந்து ஆகாயத்தைப் பார்த்து, வணங்கி நிற்கிறார்.)  ஆண்டவன்: நீதிதேவா! பூலோகத்திலே புதுக்கருத்துகள் பரவி விட்டனவாம். பழைய நிகழ்ச்சிகளுக்கு, நாம் கூறின முடிவுகள், தீர்ப்புகள் தவறு என்று புகார் கிளம்பி விட்டது. ஆகவே இனி பழைய தீர்ப்புகள், செல்லுபடியாகா என்று கூறி விடுவார்கள் போலிருக்கிறது. இதை உத்தேசித்து புனர் விசாரணை நீதிமன்றம் நியமித்திருக்கிறேன். இராவணன் குற்றவாளிதான். இலங்கை அழிந்தது நியாயமே. இராவணன் இரக்கமற்ற அரக்கன் என்பதுதானே கம்பரின் குற்றச்சாட்டுகள். அதனால் அந்த வழக்கை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள். உடனே நீதிமன்றம் கூட ஏற்பாடுகள் நடக்கட்டும்.

காட்சி -2


இடம்: இராவணன் மாளிகை


(இராவணன் கம்பீரமாக அமர்ந்திருக்கிறான். அவன் முன்னால் பழ வகைகளும், மதுக்கிண் ணமும் இருக்கின்றன.

பாடகன் ஒருவன் அவர் எதிரே அமர்ந்து பாடிக் கொண்டிருக்கிறான். இராவணன், மதுவை சுவைத்தும் பாடலை ரசித்தபடியும் இருக்கிறான். பாடல் முடிகிறது. நீதிதேவனின் பணியாள் வருதல். அவனைக் கண்ட இராவணன்)

இராவணன்: யாரப்பா, நீ? பணியாள்: நீதிதேவன் சபையிலே, சுவடி ஏந்துவோன். இராவணன் : ஓகோ! சுமைதாங்கியா! (பணியாளனைப் பார்க்கிறான். அவன் முறைப்பாக இருப்பது கண்டு)

கோபியாதே அப்பனே வேடிக்கைக்குச் சொன்னேன். அதுசரி, நீதிதேவன் சபையிலே சுவடி ஏந்துவோனுக்கு, இந்த அக்ர மக்காரன் வீட்டிலே, என்னப்பா வேலை?

பணியாள்: வேலையுமில்லை, சொந்தமு மில்லை, சேதி சொல்ல வந்திருக்கிறேன்.

இராவ: ஓகோ! சேதி சொல்ல வந்திருக்கிறாயா! நீ அவனை விட புத்திசாலி.

பணி: எவனை விட?

இராவ: முன்பு என்னிடம் தூது சொல்ல வந்தானே, ஹனுமான்! அவனை விட. என்ன சொல்ல வந்திருக்கிறாய்?

பணி: உங்கள் மீது அளிக்கப்பட்ட தீர்ப்புகளை, மறு விசாரணை செய்யும்படி, ஆண்டவன் கட்டளை இட்டிருக்கிறார்.

இராவ: மறு விசாரணையா! மகிழ்ச்சிக்குரிய சேதிதான். அதுசரி! என்ன திடீரென்று என் மீது அக்கறை?

பணி: அக்கறை உம்மீது அல்ல. பூலோகத்திலே புகார் கிளம்பி விட்டதாம். முன்பு அளிக்கப்பட்ட தீர்ப்புகள், சரியல்லவென்று.

இராவ: அதுதானே பார்த்தேன். புகார் கிளம்பி விட்டதா? நான் எதிர்ப்பார்த்ததுதான்.

பணி: என்ன எதிர்ப்பார்த்தீர்கள்?

இரா: எத்தனை நாளைக்குத்தான், பூலோக வாசிகள், விழிப்புணர்ச்சியற்றுக் கிடப் பார்கள், என்று,

பணி: அது சரி, அற மன்றம் கூடுகிறது. தாங்கள் வரவேண்டுமென்று நீதிதேவன் கட்டளை.

இராவ: நான் வருகிறேன். என் மீது குற்றம் சுமத்தி, என்னை இரக்கம் எனும் ஒரு பொருளிலா அரக்கன் என்று கூறினாரே, கம்பர், அவரும், அவ ரைச் சார்ந்தவர்களும் வருகிறார்கள் அல்லவா?- பணி: அவர்கள் எவரும் இதில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமுமில்லை, வரவும் மாட்  டார்கள். இராவ: அது எப்படி? என் மீது குற்றம் சுமத்தி னார்கள். சுமத்தப்பட்ட குற்றங்களை, பட்டியல் போட்டு, பேழையில் வைத்து, ஆளுக்கொரு புறம் பிடித்துத் தூக்கிக் கொண்டு போய், தேடித் தேடிக் கொடுத்தார்கள். அய்யோ! இன்னும் விசாரணை வரவில்லையே என்று பயந்து, ஒடி ஒடிப் போய்ப் பார்த்தார்கள். அப்படிப்பட்டவர்கள் விசா ரணைக்கு வரமாட்டார்கள் என்று கூறுவது எப்படிப் பொருந் தும்?

பணி: இதற்கு நான் பதில் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறீரா?  இராவ: சொல்லித்தான் ஆகவேண்டும். பணி: நீர், அறிவாளி! திறமைசாலி! நிர்வாகத்தில் ஆற்றல் மிக்கவர். ஆளும் திறமை மிக்கவர். உமது ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகள் பலப்பல. அப்படிப் பட்ட நீங்கள் கேட் கும் கேள்விகளுக்கு, அவர்கள் சரியாகப் பதில் சொல்ல முடியாமல், திணறி, தத்து பித்து என்று, முன்னுக்குப் பின் ஏதாவது உளறி விட்டால் சாட்டப்பட்ட குற்றங்கள் உடை பட்டு விடுமோ, என்ற அச்சம், அவர்கட்கு இருக்கலாம். இராவ; அதனால், கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என்று கூறுகிறாயா? பணியாளனே கேள்! என் மீது குற்றம் சுமத்திய வர்கள் விசாரணையில் கலந்து கொள்ளத்தான் வேண்டும். எனது கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். அதன் வாயிலாக உண்மை உலகுக்குத் தெரிய வேண்டும். அவர்கள் வர மறுத்தால், நான் விசாரணையில் கலந்து கொள்ள மாட்டேன். விலகிக் கொள்கிறேன் என்று நீதிதேவனிடம் கூறிவிடு. நீ, போகலாம்.

[காட்சி முடிவு)

காட்சி - 3


இடம் நீதிதேவன் மாளிகை


(நீதிதேவன் அமர்ந்து இருக்கிறார். பணியாள் வருதல். அவனைக் கண்டதும்)

நீதிதேவன்: என்ன அறமன்றம் கூட ஏற்பாடுகள் செய்து விட்டாயா? இராவணனிடம் செய்தியைச் சொன்னாயா?

பணி: ஏற்பாடுகள் முடிந்து விட்டன, தேவா. ஆனால், இராவணன் விசாரணையில் கலந்து கொள்ள மறுக்கிறான்.

நீதி: ஏன், என்ன காரணம்?

பணி: தன் மீது குற்றம் சுமத்தியவர்களை, தான் குறுக்கு விசாரணை செய்ய சம்மதித்தால்தான், வருவேன் என்று கூறுகிறான்.

நீதி: இந்த சங்கடத்திற்கு என்ன செய்வது மேலிடமாகிய ஆண்டவனோ, விசாரணையை நடத்து, என்று ஆணை இடுகிறார். இராவணனோ, வர மறுக்கிறான். கம்பரோ கேட்க வேண்டியதில்லை . நிச்சயம் வரமாட்டார். உம்... எப்படி. . . இதை...

(இந்த நேரம் கம்பர் வந்து கொண்டிருக்கிறார். அவரைக் கண்டதும்) வாருங்கள்! வாருங்கள்! உங்களைத்தான் நினைத்தேன்.

கம்பர்: நீதிதேவா! நான் கேள்விப்பட்டது உண்மை தானா? மறு விசாரணை செய்ய ஆண் டவன் கூறினாராமே! இராவணன் வழக்கையா, முதலில் எடுத்துக் கொள்கிறீர்?

நீதி: ஆண்டவன் கட்டளையே அப்படித் தானே. ஆனால், இராவணன், விசாரணையில் கலந்து கொள்ள மறுக்கிறான்.

கம்பர்: ஏன்? எதற்காக மறுக்கிறான்?

நீதி: தன் மீது குற்றம் சுமத்தியவர்களும், விசாரணைக்குட் பட வேண்டும். தான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். அதற்கு சம்மதம் இருந்தால்தான் விசாரணையில் கலந்து கொள்வேன் என்று கூறி விட்டான். ஆகவே கம்பரே! தாங்கள் அவசியம் இதில் கலந்து கொள்ள வேண்டும். இராவணன் கேட்கும் கேள்விகளுக்கு, தங்களின் அறிவுத் திறனான பதிலால் அவனை அவ்வப்போது ஈர்க்க வேண்டும்.

கம்பர்: நீதிதேவரே! இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? இராவணன் என்னைக் குறுக்கு விசாரணை செய்வதா? அதற்காக நான் குற்றக் கூண்டிலே நிற்பதா? அரக்கன் முன்பா? முடியாது தேவா! முடியாது. முடியாதது மட்டுமல்ல, தேவையுமில்லாதது.

நீதி: கவியரசே! தங்கள் கவிதையின் வாயி லாகத் தானே, இராவணன் இரக்கமில்லாத அரக் கனாக்கப்பட்டான். பூலோகத்திலும் அப்படித் தானே பேசப் படுகின்றன. எனவேதான் ஆண் டவன் மறு விசாரணை நீதிமன்றம் அழைத்து இருக்கிறார். ஆகவே கம்பரே! தாங்கள் தவறாது கலந்து கொள்ளத்தான் வேண்டும்!

 

கம்பர்: தேவா! விஷத்தைக் கக்கும் பாம்பு, கொடியது. அதன் விஷம் தீயது. ஆபத்துக்குரியது, என்று எடுத்துக் கூறிய தீர்ப்பு தவறென்றால், இராவணன் அரக்கன் என்று நான் கூறியதும் தவறுதான், தேவா.

நீதி: உவமையிலே உம்மை வெல்லும் திறன் எனக்கேது? கம்பரே! விசாரணையில் தாங்கள் கலந்து கொள்வதாக இராவணனுக்கு சொல்லி அனுப்பி விடுகிறேன். கம்பர்: சரி, தேவா! நான் கலந்து கொள்கிறேன். இராவணனின் வாதத்தையும் தான் கேட்போம். மக்களும் கேட் கட்டும். நான் வருகிறேன்.

[கம்பர் போகிறார்) [காட்சி முடிவு)


- தொடரும்

-  விடுதலை நாளேடு, 13.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக