சனி, 3 நவம்பர், 2018

எது எப்படி இருந்தாலும்...

20.11.1932 - குடிஅரசிலிருந்து...


எது எப்படியிருந்த போதிலும் முன் குறிப் பிட்ட அதாவது சர்வ சக்தி சர்வ வியாபகம் சர்வ தயாளத்துவம் கொண்ட கடவுளால் சிருஷ்டிக்கப் பட்டவர்களாகவும் சர்வ சமரசம் கொண்ட மதத்தைப் பின் பற்றியவர்களாகவும் உள்ள மக்களுக்குள் ஒருவன் ரிக்ஷா வண்டி இழுத்து கஷ்டப்படவும், ஒருவன் அதன் மேல் சுகமாய் உட்கார்ந்து சவாரி செய்யவும், ஒருவன் கிரீடத்தை அணிந்து பல்லக்கில் சவாரி செய்யவும் 16 பேர்கள் முக்கி முக்கி சுமந்து செல்லவும் அக்கடவுளும் மதமும் எப்படி அனுமதித்தன என்று கேள்விக்கு அது நமக்குத் தெரியாது. சர்வசக்தி உள்ள கடவுள் செயல் என்பதைத் தவிர இதுவரை எந்த கடவுள் நம்பிக்கைக் காரரும் மத நம்பிக்கைக் காரரும் வேறு  பதில் சொன்னதாகத் தெரிய வில்லை. ஒரு சமயம் இச் செய்கைக்கு முறையே ஒருவரின் அதாவது ரிக்ஷா வண்டியிழுப்ப வனின் முட்டாள்தனமும், சவாரி செய்பவனின் அயோக்கித்தனமும் என்று பதில் சொல்லக் கூடுமானாலும்  சர்வசக்தியும், சர்வ வியாக மும், சர்வ தயாபரத்துவமும் உள்ள கடவுளுக் கும் சர்வ மனித சமுக சமத்துவமாகிய மதத்திற்கும் தன்னை ஏற்றித் துதித்துப் பின்பற்றும் மக்களின் இம்மடமையையும், அயோக்கியத் தனத்தையும் நிறுத்த முடிய வில்லை என்பதாவது விளங்குகின்றதா இல்லையா? என்பதைப் பொறுமையோடு பகுத்தறிவுடன் நடுநிலையில் இருந்து யோசித் துப்பாருங்கள்.

-  விடுதலை நாளேடு, 2.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக