புதன், 7 நவம்பர், 2018

'தீபாவளி!'

* ராமர், வனவாசம் முடிந்து, சீதையுடன் அயோத்தி திரும்பிய நாளில், மக்கள், தங்கள் இல்லங்கள் தோறும் தீபங்களை ஏற்றி, மகிழ்ச்சிப் பெருவிழாவாகக் கொண்டாடினர். அதுவே, தீபத் திருநாளாக மாறியது.


* தீபாவளித் திருநாளில், திருக்கயிலாயத்தில், சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாட்டு ஆடியதாக ஒரு புராணக் குறிப்பு உண்டு. அதை, தாந்த்ரேஸ்' தினமாக கொண்டாடுகின்றனர். அன்று, சொக்கட்டான் ஆடினால், செல்வம் பெருகும் என்று, தீபாவளி தினத்தில், குஜராத்தியர்கள், சொக்கட்டான் ஆடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

* பாற்கடலை கடைந்தபோது, அய்ப்பசி அமாவாசை தினத்தன்று, முதன்முதலாக மகாலட்சுமி அவதரித்ததை, அவள் பிறந்த தினமாக, தீபாவளி கொண்டாடப்படுகிறது.

* கவுரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்று, வனவாசம் சென்ற, பஞ்ச பாண்டவர்கள், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு திரும்பியபோது, விளக்குகள் வைத்து வரவேற்ற தினமாகவும், தீபாவளி கருதப்படுகிறது.

* ஈசனின் இடப்பாகத்தைப் பிடிக்க, சக்தி, 21 நாள்கள் கேதார கவுரி விரதத்தை' புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து, அய்ப்பசி அமாவாசை நாளில் முடித்ததால், ஜோதி சொரூபமான இறைவனை வணங்கும் நாளாக, தீபாவளி கொண்டாடப்படுகிறது.

* எமனிடம், சாவித்திரி போராடி, சத்தியவானை உயிரோடு மீட்ட நன்னாளே, தீபாவளி திருநாள்.

* தன் முன்னோர், புனிதமடைய வேண்டி, பகீரதன், தேவலோக கங்கையை பூமிக்கு எடுத்து வந்த நாளே, தீபாவளி திருநாள்.

* கோகுலத்தில் பெரும் மழையில் தவித்தவர்களை, தன் ஒற்றை விரலால் கோவர்த்தனகிரி மலையை தூக்கி, கிருஷ்ண பகவான் பாதுகாத்தார். கோகுலத்தினர், கோவர்த்தனகிரியை வழிப்பட்ட நாளே, தீபாவளி.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்; இந்து மதப் பண்டிகையாகிய இந்தத் தீபாவளிக்காகக் கூறப்படுபவைகளில் ஒன்றாவது மனிதன் பகுத்தறிவு உள்ளவன் என்பதற்கு அடையாளமாக உள்ளதா?

ஒரு பண்டிகைக்கு எப்படி இத்தனைப் புனை சுருட்டுகள்!

ஒரு விழா என்றால், அதற்கு வரலாற்று ரீதியான பின்னணி இருக்கவேண்டாமா?

புராணமும், வரலாறும் ஒன்றாகுமா?

- மயிலாடன்

-  விடுதலை நாளேடு,5.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக