செவ்வாய், 13 நவம்பர், 2018

அய்யப்பனுக்கு வாதாடுவோர் யார் யார்?

சமூக விரோதிகள் பாலியல் குற்றவாளிகளின் கூடாரம்  அய்யப்பன் பாதுகாப்புப்படை




சபரிமலையில் பெண்களை நுழையவிட் டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டிய அய்யப்ப தர்மசேனா அமைப்பின் தலைவர் மீது பல பெண்கள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளைக்  கூறிவருகின்றனர்.

உச்சநீதிமன்றம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என்று தீர்ப்பு அளித்த உடன் அக்டோபர் 16ஆம்தேதி நடைதிறக்கப்பட்டு 17ஆம் தேதியிலிருந்து கோவிலுக்குச் செல்ல பெண்கள் முயன்றனர். அரசும் பெண்களுக்கு எல்லாவகையான பாதுகாப்பும் அளிப்போம் என்று கூறிய போதும் பாஜகவினரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் உள்ளூர் சமூக விரோதிகளுடன் சேர்ந்து பல்வேறு பெயர் களில் அமைப்புகளை ஆரம்பித்து பெண் களுக்கு எதிரான வன்முறையில் இறங்கினர்.  சபரிமலா சுரக்ஷா தள், அய்யப்ப தர்ம சேனா போன்ற பெயர்களில் அமைப்புகள் உரு வானது. இதன் தலைவர்களாக சொல்லப்படுப வர்கள் அனைவரும் குற்றவாளிகளும் முக்கியமாக பெண்களுக்கு எதிராக பல்வேறு பாலியல் வன்கொடுமை செய்தவர்களாக உள்ளனர்.  இதில் அய்யப்ப தர்ம சேனா அமைப்பின் தலைவரும் சபரிமலைக்கோவிலில் தாழமோன் தந்திரி என்று அழைக்கப்படும் உற்சவ அலங்கார செய்யும் பாப்பனரின் பேரனுமான ராகுல் ஈஸ்வர் என்பவன் குறித்து பிரபல ஊடகவியலாளர் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். இன்சி பெண்ணு என்ற பெயரில் இயங்கும் முகநூல் பக்கத்தில், ராகுல் ஈஸ்வர் மீதான முழு குற்றச்சாட் டையும் அப்பெண் பதிவிட்டுள்ளார்.

2002 முதல் 2004ஆம் ஆண்டு வரை யிலான காலகட்டத்தில், திருவனந்தபுரத் தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து இளம் பெண் ஒருவரை ராகுல் ஈஸ்வரன் பாலியல் தொல்லை தர முயன்றார்.   ஆனால் அந்த இளம் பெண், அங்கியி ருந்து தப்பி சென்றுவிட்டார். பாதிக்கப் பட்ட அப்பெண் பிரபல நடனக் கலைஞர் என்றும், அந்தத் தகவலை தனிப்பட்ட முறையில் தன்னிடம் கூறியதாக இன்சிப் பெண்ணு அந்தப் பதிவில் குறிப் பிட்டு உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக, இன்சிப் பெண்ணு தெரிவித்துள்ள தகவலில் ராகுல் ஈஸ்வரன், தனது அம்மா இப்போது வெளியே சென்றுள்ளதாக கூறினார். பிறகு என்னை அமரச் சொன் னார். அப்போது அவர் தொலைக்காட்சியில் ஆபாச படத்தை போட்டார். அதை பார்த்த எனக்கு அசவுகரியம் ஏற்பட்டது. பிறகு என்னை அழைத்துக்கொண்டு அவரது வீட்டை முழுக்க சுற்றிக்காட்டினார். ஒரு அறையை காட்டி அது தனது படுக்கையறை என்றார். பிறகு என்னை கட்டிப்பிடித்து முத்தம் வைக்க முயன்றார் - உள்ளிட்ட அந்த சம்பவம் தொடர்பான பல தகவல்கள் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் மீது ஏற்கெனவே பல பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பெண்களுடன் கூத்தடிப்பதும், போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதும் போன்றவை இவருக்கு கைவந்த கலை என்று அவருடன் பழகிய நண்பர்கள் கூறுகின்றனர். இவர் பெண்களு டன் ஆபாசமாக இருக்கும் காட்சிகள் நீண்ட நாட்களாகவே சமூகவலைதளங்களில் வந் துள்ளன. இவர்மீதான பாலியல் முறைகேடு குற்றச்சாட்டில் காரணமாக இவரை சபரி மலைக்கோவிலுக்குள் நுழைய சபரிமலை தேவசம் போர்டு அதிகாரிகள் தடைவித்து உள்ளனர். இது குறித்த செய்தி 13.11.2011 அன்று தினமலர் நாளிதழில் வெளிவந்து உள்ளது.

இந்த லட்சணத்தில் குறிப்பிட்ட வய துள்ள பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு போகக்கூடாது என்று பக்திக் கூச்சல்!

- ச.ரா.
- விடுதலை ஞாயிறு மலர், 3.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக