ஞாயிறு, 4 நவம்பர், 2018

தமாஷ்! நாய்கள் உலாவும் இடமா கோயில்?

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் உலகப் புகழ் பெற்றது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள்  கோயிலை சுற்றிப்பார்த்து, சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.


பே கோபுரம் தவிர்த்து மற்ற 3 கோபுரங்கள் வழியாக மக்கள் உள்ளே வந்து செல்கின்றனர். இந்த இடத்தில் காவல்துறையினர் தீவிர பரிசோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கோயில் வளாகத்தில் பாதுகாப்புப் பணிக்காக காவலர்கள் உள்ளனர்.

ஆனால் கருவறைகள் தவிர்த்து மற்ற சன்னதிகளில் நாய்கள் படுத்து உறங்குவது வாடிக்கையாகி விட்டது. கோயிலில் குரங்கு தொல்லை இருக்கும் என்பார்கள், ஆனால் திருவண்ணாமலை கோயிலில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு சிறிய சன்னதியில் லிங்கத்தின் மீது நாய் படுத்துத் தூங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட நீதிபதி மகிழேந்தி ஆய்வு நடத்தியபோது, முதலில் நாய்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எச்சரித்தார்.

இந்நிலையில் கிளி கோபுரம் கீழ்புறம் உள்ள நளேஸ் வரர் சன்னதி படிகளில் நாய் படுத்து உறங்குவது பக்தர்களை முகம் சுழிக்க செய்தது.

- தினமலர் வேலூர் பதிப்பு: 6.10.2018

 - விடுதலை ஞாயிறு மலர், 20.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக