இடம்: தேவலோகத்தில் ஒரு நந்தவனம். இருப்போர்: அகலிகை, தோழி, சீதை,
(அகலிகையும், தோழியும், பூப்பறித்துக் கொண்டே பேசுகிறார்கள்.)
அகலிகை: ஆமாம். அம்மணி ஏன்?
சீதை: அவரையா! அடி பாவி! அவருக்கா இரக்க சுபாவம் என்று வாய் கூசாது கூறுகிறாய்.
அகலிகை: (திகைத்து) தாயே! என்ன வார்த்தை பேசுகிறீர்.
சீதை: பைத்தியக்காரி! இரக்க சுபாவமா அவருக்கு! என்னைக் காட்டுக்குத் துரத்தினாரே, கண்ணைக் கட்டி, அப்போது நான் எட்டு மாதமடி! முட்டாளே! கர்ப்பவதியாக இருந்த என்னைக் காட்டுக்கு விரட்டின கல் மனம் கொண்டவரை, இரக்கமுள்ளவர் என்று சொல்கிறாயே. எவனோ, எதற்காகவோ, என்னப் பற்றிப் பேசினதற்காக ஒரு குற்றமும் செய்யாத என்னை - தர்ம பத்தினி என்ற முறையிலே அவருடன் 14 வருஷம் வனவாசம் செய்த என்னை - ராவணனிடம் சிறை வாசம் அனுபவித்து அசோக வனத்திலே அழுது கிடந்த என்னை, கர்ப்பவதியாக இருக்கும்போது, காட்டுக்குத் துரத்திய காகுத்தனைக் கருணாமூர்த்தி என்று புகழ் கிறாயே! கல்லுருவிலிருந்து மறுபடியும் பெண் ஜென்மம் எடுத்தது இதற்காகவா? கடைசியிலும் என்னைச் சந்தேகித்து, பாதாளத்தில் அல்லவா புகவைத்தார். அப்படிப்பட்டவரை, அகல்யா! எப்படி யடி, இரக்கமுள்ளவர் என்று கூறுகிறாய், வில்வீரன் என்று புகழ்ந்து பேசு, சத்துரு சங்காரன் என்று பேசிச் சாமரம் வீசு, என்ன வேண்டுமானாலும் பேசு புகழ்ச்சியாக, ஆனால் இரக்க முள்ளவர் என்று - மட்டும் சொல்லாதே இனி ஒரு முறை - என் எதிரில். பிராணபதே! என்னைப் பாரும்! இந்த நிலையிலா, என்னைக் காட்டுக்குத் துரத்துகிறீர்? அய்யோ! நான் என்ன செய்தேன்? குடிசையிலே இருக்கும் பெண் களுக்குக் கூட, கர்ப்பகாலத்தில், சுகமாக இருக்க வழி செய் வார்களே! சக்கரவர்த்தியின் பட்ட மகிஷியான எனக்கு இந்தக் கதியா? நான் எப்படித் தாளுவேன். பிரியபதே! என்னைக் கவனிக்கா விட்டால் போகிறது, என் வயிற்றிலுள்ள சிசு - உமது குழந்தை - அதைக் கவனியும். அய்யோ! கர்ப்பவதிக்குக் காட்டு வாசமா? அய்யோ! உடலிலே வலிவுமில்லை- உள்ளமோ, துக்கத்தையோ, பயத்தையோ தாங்கும் நிலையிலே இல்லை. இந்த நிலையிலே என்னைக் காட்டுக்குத் துரத்துவது தர்மமா? நியாயமா? துளியாவது இரக்கம் காட்டக் கூடாதா? அழுத கண்களுடன் நின்று அவ்விதம் கேட்டேனடி - அகல்யா! என் நாதரிடம். அசோக வனத்திலே கூட அவ்வளவு அழுததில்லை.
அவனிடம் பேசினபோது கூட, என் குரலிலே அதிகாரம் தொனித்தது; மிரட்டினேன், இவரிடம் கெஞ்சினேன். ஒரு குற்றமும் செய்யாத நான் - இரக்கம் காட்டச் சொல்லி இரவிகுலச் சோமனைக் கேட்டேன்.
சீதா! நான் ராமன் மட்டுமல்ல ராஜாராமன்! - என்றார்.
ராஜாராமன் என்றால் மனைவியைக் காட்டுக்கு அனுப்புமளவு கல் நெஞ்சம் இருக்க வேண்டுமோ என்று கேட்டேன். அகல்யா! என் கண்ணீர் வழிந்து கன்னத்தில் புரண்டது. புயலில் சிக்கிய பூங்கொடி போல உடல் ஆடிற்று. என் நிலையை அந்த நேரத்தில் அரக்கனான இராவணன் கண்டிருந்தால் கூட உதவி செய்வானடி. ஆனால் நீ புகழ்ந்தாயே கருணாமூர்த்தி என்று, அவர், என் கண்ணீரைச் சட்டை செய்யவில்லை - நான் பதறினேன், கருணை காட்டவில்லை, காலில் வீழ்ந்தேன் - ஏதோ கடமை கடமை என்று கூறிவிட்டு, என்னைக் காட்டுக்குத் துரத்தினார். அப்படிப் பட்டவரை, தன் பிராண நாயகியிடம், ஒரு பாவமுமறியாத பேதையிடம், கர்ப்பவதியிடம், கடுகளவு இரக்கமும் காட்டாதவரை, அகல்யா! புத்தி கெட்டவளே! கூசாமல் கூறுகிறாய், இரக்கமுள்ளவரென்று. இனி ஒரு முறை கூறாதே; என் மனதை வேக வைக்காதே. (சீதை கோபமாகச் சென்று விட, அகல்யா திகைத்து நிற்கிறாள்.)
காட்சி முடிவு
காட்சி - 11
பாதை இராவணன், நீதிதேவன் வருதல்
இராவணன்: நீதிதேவா, போதுமல்லவா? இரக்கத்தின் பல வகை உருவங்கள் - விளைவுகள்.
நீதிதேவன்: என்னால் காணவும் சகிக்க முடிய வில்லை. காதால் கேட்கவும் முடியவில்லை. அன்னை ஜானகியே இவ்வளவு வேதனைப் படுகிறாரே, அய்யனின் இரக்கமிலா செயல் கண்டு.
இராவணன்: உண்மை அதுவாக இருக்கிறதே தேவா. இரக்கம் கொள்ளாதார் பலர் உளர். அது அவரவர்களுக்கு ஏற்பட்ட சூழ்நிலை. இரக்கம் உச்சரிப்பதற்கு எளிய பதம், இனிமையுங் கூட! வாழ்க்கையிலே இரக்கத்தைத் தேடிப் பயணம் நடத்துவதோ - அலைகடலிலே பாய்மரமற்ற கலம் செல்வது போலத்தான். வாருங்கள் போகலாம்.
(காட்சி முடிவு)
காட்சி - 12 நீதிதேவன் மாளிகை
நீதிதேவன் சோகமே உருவாக, சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார். அப்போது உள்ளே நுழைகிறான், பணியாள்.
பணியாள்: தேவா, பூலோகத்தில் தாங்கள் கண்ட காட்சிகளிலேயே, இன்னும் மனம் இலயத் திருக்கிறீரா? இல்லை, இலங்கேசன் தன்னுடைய அரக்கக் குணத்தை தங்களிடமும் காட்டி விட் டானா? கலக்கத்துக்கு என்ன சுவாமி காரணம்? இல்லை, என் காதில் பட்டவை : தங்கட்கும் எட்டி விட்டதா?
நீதிதேவன்: என்ன வரும்போதே, அடுக் கடுக்காக கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வருகிறாய்! எனது கலக்கம், நான் - பூலோகத்தில் கண்ட காட்சிகள்தான். இலங்கேசன் தன் வாதத் திற்கு, ஆதாரபூர்வமாக பூலோக. நடவடிக்கை களைக் காட்டினான். பூலோகம் என்ன? தேவ லோகத்திலும் சில காட்சிகளைக் கண்டேன். அவரவர்கள் ஏற்றிருக்கின்ற தொழில், வாழ்க்கை முறை, இலட்சியம் ஆகியவற்றால், இரக்கம் காட்ட முடியாத சந்தர்ப்பங்கள் பல நேரிடுகின்றன. இதை நினைத்தே கலக்கம் கொண்டேன். அது சரி, நீ ஏதோ காதில் பட்டது என்றாயே, என்ன சேதி காதில்பட்டது?
பணியாள்: சந்தேகிக்கிறார்கள். சுவாமி, தங் களை. அது மட்டுமல்ல, குற்றமே சாட்டுகிறார்கள், தங்கள் மீது.
நீதிதேவன்: (அலட்சியமாக) குற்றமா? என் மீதா? யார் அவர்கள்? பணியாள்: தேவர்கள் சுவாமி! தாங்கள் இராவணனுடன் சுற்றிக் கொண்டிருக்கிறீர் களாம். குற்றவாளியுடன் இவர் சுற்றக் காரணம் என்ன என்கிறார்கள். நீதிதேவன்: குற்றம் சாட்டப்பட்டவன், தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு, அநீதி, அக்ரமம், அநியாயம் என்பதை விளக்க ஆதாரங்களைக் காட்டினான். ஏன் அவனுடன் செல்லக் கூடாது? பணியாள்: இலங்கேசனுடன் தாங்கள் செல்வது, அவனிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டு தான் என்றும் தேவர்கள் பேசுகிறார்கள் சுவாமி. நீதிதேவன் : (கோபத்துடன்) எவரும், எவரைப் பற்றியும் எப்படியும்ஏசித் திரியும் மனோபாவம் பூலோகத்தில் தான் பெருகியிருக்கிறது, என்று எண் ணியிருந்தேன். எந்த விதமான பற்றோ, பாசமோ, கொள்கையோ, இலட்சியமோ, இல்லாதவர்களும் பாடுபடாமலேயே பலனை அனுபவிக்க வேண்டும் என்பவர்களும் மட்டுமே இதைப் போன்ற இழி வான காரியங்களைக் செய்து கொண்டிருப்பார்கள். இந்தப் புற்றுநோய் பூலோகத்தோடு நிற்காமல், தேவலோகத்தையும் பற்றிக் கொண்டது போலும். அவைகளை விட்டுத் தள்ளு. காதில் போட்டுக் கொள்ளாதே. அப்படியே விழுந்தாலும், மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதே! தென்னிலங்கை இராவணன், தீர்ப்பைப் பற்றி, கவலையின்றியே இந்த விசாரணையில் கலந்து கொள்கிறேன், என்று சொல்லிவிட்ட பிறகு, அவன் எனக்கு இலஞ்சம் தர வேண்டிய அவசியம் ஏது?
(இப்போது, கம்பர் கோபமாக உள்ளே நுழைகிறார்.)
அவரைக் கண்டதும்
பணியாள்: இதோ, கவிச் சக்கரவர்த்தி அவர்களே வந்து விட்டார். கம்பர்: நீதி தேவன் அவர்கள் ஏதோ அவசியத் தைப் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் இப்போது அவசியத்தோடுதான் வந்துள் ளேன். அவசியம் இல்லாமல் அந்த அரக்கனோடு, தாங்கள் பூலோகத்திற்குச் சென்று வருவதும், அவனோடு குலாவிக் கொண்டிருப்பதும் கேலிக் குரியதாக உள்ளது தேவா! இது அவசியம்தானா, என்று கேட்கிறேன்.
தொடரும்..
- விடுதலை நாளேடு, 22.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக