செவ்வாய், 13 நவம்பர், 2018

வாய்மூடி மவுனியாய் அய்யப்பன்

மா.பால்ராசேந்திரம்




பிரம்மச்சரியம் நீங்கி, கிரகஸ்தன் ஆன பின்பும் கூடத் தன்னை வைத்துப் பெண் பக்தர்களின் உரிமையினைத் தடுத்திடும் ஆரியத்தின் கொடுஞ்செயலினைக் கண்டிக் காது வாய்மூடி மவுனியாய் மணிகண்டன் இருக்கலாமா? இருக்குமேயானால் அது ஊமைக் கடவுளாக அல்லது உயிரற்றக் கல்லாகத்தானே இருக்க முடியும்!


கனமான கடவுளே உமைச்செய்த சிற்பி எவன்?


காட்டுவீர்!" என்றாரே புரட்சிக் கவிஞர் காட்டியதா? புலிப்பால் கொண்டு வருகிறே னெனப் பேசிச் சென்றவன் அய்யப்பன்' எனப் பொய்க்கதை புனைந்து விரித்திட் டோர் இன்று அவ்வாய் பேசாதிருப்பதற்கு என்ன கதை கூறுவார்? கலியுகம் அய்தீகம், நம்பிக்கை என்றுதானே ஓடி ஒளிவார்? நம்பூதிரிகளின் கைப்பாவைதானே அய்யப் பன் கடவுளும். யாருக்கேனும் அய்ய முண்டோ?


மகளிரின் மணம் பட்டால் மாயமாகிடு வான் அய்யப்பன்", என்று கயிறு திரித்திடும் கசமாலங்களின் செய்கைகளுக்கு நம் பிக்கை' என்ற பட்டம் சூட்டிப் பாராட்டிச் சீராட்டிப் போற்றுவது எத்தனை காலங்க ளுக்கு? அதற்கோர் விடிவு காலம் வர வேண்டாமா? அதுதான் இன்றைக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பாய் வந்துள்ளது. பெண்ணு ரிமை பேணப்படவேண்டும். மக்களாட்சியின் மாண்பு என்பது பாலின வேறுபாடின்றித் தரப்படும் சமஉரிமைத் தத்துவத்திலேயே நிலை நிற்பதாகும். அதுவே நியாயமானது, நாணயமானது.


சபரிமலையில் பிரம்மச்சரியத்தை ஏற்று உறைந்திடும் அய்யப்பன் எங்கும் அவ் வாறே கொண்டொழுகியிருந்தால் இன்றை யப் பெண்பக்தர் தடுப்பினை ஓரளவிற்கு நாம் ஒப்பலாம். ஆனால் அவனோ பிரம் மச்சரியத்தை முறித்துப் பல இடங்களில் பெண்கள் பலரை மணந்து மணக்கோலத் தோடு அமர்ந்துள்ளானே! இதற்கு இன்று கூக்குரலிடுவோர், மறிப்போர், எதிர்ப்போர், தடுப்போர் என்ன நியாயம் கற்பிப்பார்?


ஒன்றுமில்லாத கடவுளுக்கு மனைவி ஏன்?


கல்யாணம் ஏன்? ஒரு மனைவி இருந்தால்கூட


பரவாயில்லையே! எந்தக் கடவுளுக்கு இரண்டுக்குக்


குறைந்து இருக்கிறது?, என்றாரே தந்தை பெரியார். அதுதானே உண்மை. பெண் ணையே வெறுப்பவன் என்ற பொய் வேடத்திற்குள் காமக்களியாட்டம் போடும் அய்யப்பனின் கோலம் இன்னொருபுறம் நடந்து வருகிறதே! ஆம்.


தினமலர் 21.11.2017 நெல்லைப் பதிப்புத் தரும் தகவலைச் சற்றுத் திரும்பிப் பார்த்திட அய்யப்பப் பக்தர்களைக் கோருகிறோம்,


ஆரியங்காவில் அய்யப்பன் புஷ்கலா தேவி என்னும் மதுரை சவுராஷ்டிரப் பெண்ணை மணமுடித்துத் தம்பதி சமேதர ராய் வாழ்கிறார். சொல்வது தினமலர் அப்படியாயின் சபரிமலையில் இருப்பவர் யார்? இவரே அவரென்றால், அவர், இவராக, குடும்பம் நடத்துபவராக, பெண் டாளும் நாயகனாக மாறிய பின் பெண் நாற்றம் பொறாதவரென்பது பித்தலாட்ட மில்லையா?


அச்சன்கோவில் என்ற இடத்தில் பூர்ணா, புஷ்கலா என்ற இரு பெண்டாட் டிகளுடன் சல்லாபம் செய்து காட்சி தருகிறார், எழுதுவது தினமலரே!


சல்லாபம் என்று எழுதி அவனின் நெறிகெட்ட தன்மைதனை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறதே அக்ரகார ஏடு இந்த இடத்தில் நம்மை (பக்தர்களை) விஷப்பூச்சி கள் கடித்தால் இவ்விடத்தில் இவர்கள் தரும் தீர்த்தத்தைக் குடித்தால் விஷம் இரங்கிக் குணமாகிவிடுமாம். கட்டுரை யோடு சரியா, இல்லை அங்கு வாழ்வோர் மருத்துவமனை, மருத்துவர், மருந்து இன்றியே வாழ்கிறார் என்ற உண்மைச் செய்தியா? சொல்லிடுவாரா?


அய்யப்பன் பிரம்மச்சாரியென்று புலம்பிடும் பக்திப் பயித்தியங்களே! சாஸ்தாம் கோட்டையில் பிரபா எனும் மனைவியுடனும், சத்யகன் என்னும் மகனுடனும் அய்யப்பன் இருக்கின்றார். இக்கோவிலுக்கு ராம லட்சுமணர் அயோத்தி திரும்புகையில் வந்து போயி னர், இதுவும் தினமலரின் செய்திதான். திரேதாயுகக் கதைகள் வேறு செருகல்கள். எல்லாவற்றையும் பார்க்கையில் பிரம்மச்சரியம் நீங்கித் கிரகஸ்தனாகிவிட்ட பின்னர் ஏனிந்த அழிம்புவேலைகளை ஆரியம் தூண்டிவிடுகிறது?


பெண்டாளக் கேட்டது தெய்வமென் றும் - தன்


பெண்டினைத் தந்தான் மன்னனென் றும்,


புராணங்கள் படைத்தோர் அத்தெய் வங்களைப் பெண்கள் கையெடுத்துக் கும்பிட அருகே செல்ல அருகதையற்ற வர்கள் என்பது என்ன நியாயம்?


10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அய்யப்பன் ஸ்தலத்திற்குள் வரக்கூடாதாம். மாதவிடாய் அவனுக்குப் பிடிக்காதாம் - யாருக்குத்தான் பிடிக்கும்? அவளுக்கே பிடிக்காதே! கருவாய் உண்டு வளர்ந்தவர்தாம் அய்யப்பன் உட்பட அனைவரும். தெரிய வேண்டும் காரணங் கூறுவோர்.


"குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற்


கொஞ்சமும் திட்டிலையோ?"


கேட்டாரே புரட்சிக்கவிஞர்.


ஜெயமாலாக்கள் நுழைந்தால் தப்பில்லை, தவறில்லை, தீட்டில்லை. பிரசன்னங்களால் பிரசாந்திகளும், ஸ்தலமும் புனிதம் பெற்று விடும். என்னே அழுக்கு முட்டைகள்!


சொன்னாரே புரட்சிப் பாவலர்,


கோயிலிலே பொருள் கூட்டும் குருக் களும்


கோதையர் தோன்றி சாய்கின்றார் என்று கட்டளையிடுவதெல்லாம் கடவு ளல்ல; கடவுள் பெயரில் களவாடிடும் கண்ணான்களே!


'திருட்டுக் குருமாரின் - கெட்ட


செயலை ஒப்ப வேண்டாம் என்பார் புரட்சிக்கவிஞர். ஒப்பியதால் கேரள நம்பூதிரிகளின் முதலிடாத வணிகம் சீராய் நடக்க வழியேற்பட்டுள்ளது. நம்பிக் கையை அசல் ஆக்கிக் குவித்திடும் வருவாய் அளவிடற்கரியது. செய்யாதே' என்ற எதிர்மறைதான் மனிதனைத் தூண்டிச் செயல்பட வைப்பதாகும். அதுவே சபரி மலையிலும் நடக்கிறது. கடவுள், சமயம், ஆழ்வார் நாயன்மார் மீது


பழிபோட்டு, மக்களை ஏமாற்றிச் சோம் பேறி


களாக்கி, வயிறு வளர்ப்பவர்களின் தொழிலையும்


செல்வாக்கையும் அடியோடு ஒழிக்க வேண்டும், என்றார் அறிவாசான் தந்தை பெரியார்.


"கோயிலில் சமத்துவம் அடைந்து விட்டால் மற்ற காரியங்களில் வித்தியாசம் இருக்க முடியவே முடியாது, என்பது அய்யாவின் கருத்து,


பெண்களும் சம உரிமை பெற வேண்டும். ஆதிக்கம் வீழ்த்தப்பட்டால் தான் உரிமைகள் கிட்டும். கிடைத்த சமூக நலன்களெல்லாம் இன்று நடைபெறும் போராட்டங்கனை விடப் பன்மடங்கான போராட்ட எதிர்ப்புகளை வென்றதால் தான். இன்று


புவியின் பெண்கள் சிறுநிலையில் இருக்கவில்லை; விழித்துக் கொண்டார்! எனக் காட்டுங்கள். பெண்ணுக்கொரு நீதி கண்டீர். சபரிமலை' பெண்களின் சுதந்திர பூமியென வென்று காட்டுங்கள். ஆரியம் அஞ்சிட அதிகாரத்தை நிலை நாட்டுங்கள் மானமுள்ள பெண்ணினமே!


- விடுதலை ஞாயிறுமலர், 3.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக