புதன், 14 நவம்பர், 2018

திருவாளர் பன்றி அய்யர்!

பிராமணனைத் திட்டுகிறவன் பல நரகங்களில் வாழ்ந்து பின்னர் காகமாகப் பிறப்பான்.

துளசிதாஸ் இராமாயணம்

அப்படி என்றால், இப் பொழுது உயிர் வாழும் காகங்கள் எல்லாம் பார்ப்பனர்களைத் திட்டியவர்கள்தானா? கா கா என்று காகம் கரைவதெல்லாம் பார்ப்பனர்களைக் கண்ட மாதிரி திட்டும் ஒலிகள்தானா?

இப்பூவுலகில் தேவர்கள் எறும்பாகத் திரிவதாக சாஸ்திரம் சொல்கிறது. அரிசி மாவினால் கோலமிட்டால் எறும்புகள் அதை உண்டு மகிழ்ந்து ஆசி வழங்கும். ஆகவே, அரிசி மாவினால் மட்டுமே கோலம் போடுங்கள். வண்ணக் கலவைகள் விழாக் களில் இருக்கட்டும்!

- குமுதம் சினேகிதி

பிப்ரவரி , (16-29), 2012

தேவர்கள் என்றால் மிகவும் உயர்ந்தவர்கள் என்றுதானே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்படி எச்சில் பொறுக்கும் எறும்புகளாகத் திரி கிறார்களோ... ஒரு நாளைக்கு நம் காலில் பட்டு (சங்கராச்சாரியார் உள்பட) எத்தனைத் தேவர்கள் செத்து மடிகிறார்கள் பார்த்தீர்களா?

மகமதிய அரசனாகிய ஜகாங் கீர் தன் தந்தை அக்பருடைய ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா தேசத்து ஒரு கிருத்துவப் பாதிரியினால் உருளைக் கிழங்கும், புகையிலையும் இந்தியாவுக்குள் கொண்டு வந்து விளைவித்ததாக டாஜுக்' என்னும் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இதைச் சரித்திரக்காரர்களும் அங்கீகரித்து இருக்கிறார்கள். ஆனால், புகை யிலையைப்பற்றிப் பிரமாண்ட புராணத்தில் எழுதி இருப்பதைப் பாருங்கள்!

ப்ராப்தே கலியுகே கோரே       சர்வ வருணாள் சமேதராஹ

தமளாம் பாதிதம் யேனஸகச்சே       நர காரணவே.''

இதன் கருத்து: யாரொருவன் கலியுக அஞ்ஞான காலத்தில் புகையிலையை எவன் உப யோகிக்கிறானோ அவன் நரகத் திற்குப் போவான் என்பதாம்.

மேலும், பத்ம புராணம் பகருவதைக் கேளுங்கள்.

தாம்ப்ர பாணரதம் விப்ரம்தானக்        ருத்து வேதியே நரஹ

தாதாரோ நரகம் யாதிப்        ராமணோக் ராம சூக்ரஹ.''

இதன் கருத்து: தருமவான் சுருட்டுப் பிடிக்கும் பிராம ணனுக்குத் தருமம் செய்தால், அவன் நரகத்திற்குப் போவான். மேலும் அப்பிராமணன் கிராமத் தில் பன்றியாய்ப் பிறப்பான் என்பதே இதன் கருத்து.

பத்ம புராணத்தின் கூற்றுப் படி, சுருட்டுக் குடிக்கும் பிராம ணன் கிராமத்தில் பன்றி யாகப் பிறப்பான்' என்பது உண்மை யானால்,இன்றைக்குச்சேற்றுக் குட்டைகளையும்,மலக் கிடங்கு களையும் வசந்த மாளிகையாகக் கொண்டு உழன்றுத் திரியும் பன்றிகள் எல்லாம் போன ஜென்மத்தில் சுருட்டுக் குடித்த பிராமணர்கள்'தானா?

கடந்த ஜென்மத்தில்' சுருட்டுக் குடித்த சீத்தாராம சாஸ்திரிகளும், சீனுவாசாச்சாரிகளும், சீனுவாச அய்யரும், அய்யங்கார்களுமே தான் இந்தப் பன்றிக் கூட்டங்கள் என்று நாம் கொள்ளலாமா?

- மயிலாடன்

-  விடுதலை நாளேடு, 14.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக