ஞாயிறு, 4 நவம்பர், 2018

இந்து மதத்தின் விசேஷங்கள்

ஒரு நாள் நாரதர் வைகுண்டம் போனார். திருமாலிடம் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் விடை பெற்றார். பகவான் லட்சுமி தேவியிடம் நாரதர் அமர்ந்திருந்த இடத்தை சாணமிட்டுத் தூய்மைப்படுத்திவிடு என்றார். திகைத்த லட்சுமி அவர் பரம பக்தர் ஆயிற்றே எனத் தயங்கினாள்.

இருக்கலாம்... ஆனால் அவர் எந்த குருவிடமும் மந்திர தீட்சை பெற்றவர் அல்ல. மந்திர தீட்சை பெறாது மந்திரம் - ஜபிக்காதவர்களின் உடல் தூய்மை பெறாது என்றார் திருமால். குருவிடம் மந்திர தீட்சை பெறுவதும், பெற்ற மந்திரத்தைத் தொடர்ந்து ஜபித்து வருவதும் மிக முக்கியம்.

- அன்னை சாரதாதேவி

(மங்கையர் மலர் 1.10.2018 பக்கம் 40)

அப்படியா சேதி?

அப்படியானால் நாரதர் பகவான் என்பதெல்லாம் சுத்தப் புருடாதானா? குரு பத்தினியின் கற்பை அழித்த சந்திரனை சிவபெருமான் தன் தலையில் சூடியிருக்கிறானே, எப்படி? விசுவாமித்திரர் எந்த குருவிடம் தீட்சை பெற்றார்?

முப்பத்து முக்கோடி தேவர்களும், அட்ட திக்குப் பாலர்களும் எந்த குருவிடம் தீட்சை பெற்றார்களாம்? அவ்வப்பொழுது உளறுவதெல்லாம் இந்து மதத்தின் விசேஷங்களோ!

- விடுதலை ஞாயிறு மலர், 20.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக