புதன், 21 நவம்பர், 2018

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் 8



இடம்: வால்மீகி ஆசிரமம் இருப்போர்: துரோணர், வால்மீகி


துரோணர்: விசாரம், வேதனை, விதண்டா வாதம் இவை அனைத்தும், முனிவர்களாகிய எங்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறதே. தங்களுக்குத் தெரியாதோ?

வால்மீகி: ஏன், என்ன நடந்தது, முனிவரே!

துரோணர்: இராவணன் இரக்கமில்லா அரக்கன் என்று குற்றம் சாட்டி புகார் மனு ஒன்றை ஆண்டவன் இடத்திலே கம்பர் கொடுத்தார்.

வால்மீகி: ஆண்டவன் என்ன செய்தார்?

துரோணர்: என்ன செய்வார்? இராவணனி டத்தில் ஏற்கெனவே ஆண்டவனுக்கிருந்த கோபத் தில், நீதிதேவனை அழைத்து விசாரணை செய்யக் கட்டளை இட்டார்.

வால்மீகி: வாதப் பிரதிவாதங்கள் பலமாக இருக்குமே!

துரோணர்: இராவணனைக் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தி அவன் பெருமையைக் குலைத்து விடலாம் என்று, கனவு கண்டார் கம்பர்.

வால்மீகி: கனவு பலித்ததோ?

துரோணர்: கனவாவது, பலிப்பதாவது! இராவ ணனுடைய வாதங்களுக்கு பதில் கூற முடியாமல் தவிக்கிறார் கம்பர்.

வால்மீகி: வினாசகாலே விபரீதபுத்தி கம்பருக்கு ஏன் இந்த வம்பு. மூலத்தைத் திரித்துக் கூறி புகார் மனு கொடுத்தால், விசாரணையின் போது இராவணன் அழிந்து படுவான் என்று கம்பர் எண்ணினார், போலும்.

துரோணர்: புகார் மனு கொடுத்த கம்பர் புழுபோலத் துடிக்கிறார். இராவணனின் மறுப்புரை களைக் கேட்டு விசாரணை வேண்டும் என்று கூறிய கம்பர், இப்பொழுது விசாரத்தில் மூழ்கிக் கிடக்கிறார். பூலோகத்திலும், தேவலோகத் திலும் விசாரணைப் பற்றியே பேச்சாக இருக்கிறது. முனிவரே!

(கம்பர் வருகிறார்)

வால்மீகி: வாரும் கம்பரே, வாரும்! என்ன விசாரத்துடன் காணப்படுகிறீர்! இராவணன் மீது நீர் கூறிய குற்றச்சாட்டுக்கு, மறு விசாரணை நட..ப்பதாகக் கேள்விப்பட்டேனே! உண்மைதானா?

கம்பர்: உண்மைதான் முனிவரே! வால்மீகி: எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது, விசாரணை?

கம்பர்: இராவணன், தான் செய்த குற்றங்களை வாதிட்டு மறுக்கிறான். அப்பழுக்கற்ற - ஆதாரங் களை அள்ளி, அள்ளி வீசுகிறான். உவமைகளைக் காட்டுகிறான். உடல் சில்லிட்டுப் போகிறது. வாதங்கள் பல புரிகிறான். ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. கவிச் சக்கரவர்த்தி நான், கலங்கி விடுகிறேன், அவன் வாதத்தைக் கேட்டு... முனிபுங்கவரே! இதற்கு நான் என் செய்வது?

வால்மீகி: உமக்கு வேண்டும் ஒய்! நான் எழுதி யதைத் திரித்து எழுதியதால் அல்லவோ இந்த அவஸ்தை உ.மக்கு. துரோணர்: நன்றாகச் சொன்னீர்கள். ஓய் கம்பரே! இந்த மாமுனிவர் எழுதியதைத் தமிழில் அப்படியே மொழி பெயர்ப்பதை விட்டுவிட்டு, அடிப்படையை மாற்றி ஏனய்யா, அவஸ்தையைப் படுகிறீர்.

கம்பர்: என்ன மாற்றம் செய்தேன்? நாராயண மூர்த்தியின் அவதாரமான ஸ்ரீராமச்சந்திரனின் ஏக பத்தினியாகிய சீதா பிராட்டிக்குக் களங்கம் ஏற்படக் கூடாதெனக் கருதினேன். இதுவா குற்றம்? வால்மீகி: நீர் கூறுவது உண்மையானால், கர்ப் பவதியான ஜானகியை காட்டிற்கு அனுப்பினானே சந்தேகப்பட்டு, அதிலே களங்கம் இல்லையா கம்பரே!

துரோணர்: அதோடு விட்டாரா! சரயு நதிக் கரையில் இறந்து கிடந்த இராமச்சந்திரன், மீண்டும் அயோத்திக்கு வந்து, ஜானகி சமேதராய் பட்டாபிஷேகம் செய்து கொண்டதாகவல்லவோ எழுதி விட்டார். பட்டுப்போன இராமச்சந்திரனுக்குப் பட்டாபிஷேகமாம். என்ன விந்தை!

கம்பர்: விந்தையல்ல முனிபுங்கவரே! விளக்க உரை தந்தேன். சீதையின் சிறப்பியல்புகளைத் தமிழ்ப் பண்போடு இணைத்துரைத்தேன். இரா மனின் பராக்கிரமத்தை பாரெல்லாம் புகழ, பண் அமைத்துப் பாடினேன். இராவணனின் வீரம், வலிமை, தவம் அனைத்தும் அகிலமெல்லாம் அறியச் செய்தேன்.

வால்மீகி: அதில் தானய்யா, நீர் மாட்டிக் கொண்டீர். கேளுமய்யா, நம்மோட ஜென்ம விரோதிகள் அசுராள். அவர்களைப் பத்தி எழுது வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால், சும்மா விட லாமோ? இருக்கிறது இல்லாதது எல்லாவற்றையும் எழுதி விட வேண்டாமோ, நான் எழுதிய இராமா யணத்திலே சீதையைக் கவர்ந்து போகும் காட்சி

(தொண்டையைக் கனைத்துக் கொண்டு) கேளும் கம்பரே! துரோணாச்சாரியாரே! நீரும் கேளும். லோகமாதாவாம் அன்னை ஜானகியை இலங்கேஸ்வரனாகிய இராவணன் அவளின் கூந்தலைப் பிடித்து, இழுத்து அவளைத் தன் மார்போடு அணைத்து துடையில் கை கொடுத்து, தூக்கிக் கொண்டு சென்றான் என்று நான் எழுதினேன்.

எப்படி எழுதினேன்?...

துரோணர்: லோக மாதாவாம், அன்னை ஜானகியை இலங்கேஸ்வரனாகிய இராவணன், அவளின் கூந்தலைப் பிடித்து, இழுத்து அவளைத் தன் மார்... போடு.... அ...ணை....த்...து... (மேலும் சொல்ல, கம்பர் வெட்கப்படுகிறார்.)

வால்மீகி: ஆமாம் அவள் தொடையில் கை கொடுத்துத் தூக்கிக் கொண்டு சென்றான் என்று எழுதினேன். அதை அப்படியே விட்டிருந்தால், பிரஸ்தாப வழக்கிற்கு எவ்வளவோ உதவியாக இருக்கும். இராவணன் இரக்கமில்லாதவன் என்ப தும் ருசுவாகி இருக்கும். அதை விட்டு விட்டு இராவணன் சீதையை விரலால் கூட சீண்ட வில்லை. மண்ணோடு விண் நோக்கினான் என்று எழுதினீர். இப்போது படுகிறீர்,

கம்பர்: கெடக்கூடாது. தமிழனின் மரபு. அழியக் கூடாது, அவர்தம் பெருமை என்று எண்ணினேன், எழுதினேன். இதுவா தவறு? களங்கமற்றக் கற்புக்கரசி ஜானகி என்று மக்களால் மதிக்கப்பட வேண்டும், எனக் கருதி தெய்வீகத் தன்மையை இணைத்து, சீதா தேவிக்கு சிறப்பு வந்தெய்தும் வண்ணம், இலங்காதிபதி, அவளை மண்ணோடு பெயர்த் தெடுத்து விண் நோக்கினான் என்று எழுதினேன். முனிபுங்கவரே! இதுவா நான் செய்த குற்றம்.

வால்மீகி: அதுதான் தவறு என்கிறேன், நான். மூலத்தை மாற்றுகின்ற அதிகாரம் உமக்கேதையா? இராமா யணத்தை சிருஷ்டித்த வால்மீகி நானிருக்க அதைத் தமிழாக்கம் செய்ய முற்பட்ட நீங்கள் மூலத்தையே மாற்றி விட்டீரே! அதனால் அல்ல வோ இவ்வளவு தொல்லை உமக்கு! துரோணர்: அதுமட்டுமா முனிவரே! இராவ ணன் கம்பரை இழித்தும் பழித்தும் கூறுகிறான். அது, வாதி பிரதிவாதி சண்டை என்று விட்டு விடலாம். ஆனால் முப்பது முக்கோடி தேவர்களை யுமல்லவா அவன் வம்புக்கு இழுக்கிறான்.

வால்மீகி: தேவர்கள் மீது களங்கம் ஏற்படும் வண்ணம் இராவணன் நீதிமன்றத்தில் வாதிட்டு வெல்வதை நினைத் தால். . . துரோணர்: கம்பராலல்லவோ தேவலோகத் துக்கு, இப்படிப்பட்ட களங்கம் ஏற்பட்டு விட்டது என்று நினைக்கத் தோன்றுகிறது.

வால்மீகி: கம்பரே! நீர் கொடுத்த புகார்கள் விசாரணையின் போது உங்களுக்கே தீமையாய் வந்து முடியப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.

கம்பர்: மாமுனிவரே! கவிச்சக்கரவர்த்தி என்று உலகம் என்னைப் புகழ்கிறது. அது இந்த இராவ ணனுக்குத் தெரியவில்லை. அவனோ என்னை வாதிட்டுக் கொல்கிறான். நீரோ, என்னை நையாண்டி செய்து கொல்கிறீர். ஊம். . . நான் வருகிறேன்.

(கம்பர் போகிறார்) (காட்சி முடிவு)


காட்சி - 8


இடம் : அறமன்றம் இருப்போர்: நீதிதேவன், இராவணன், கம்பர், அக்னி தேவன்.


இராவணன்: அக்னி தேவனே!

புண்ணியத்தை நாடித்தானே யாகங்கள் செய்யப்படுகின்றன.

அக்னி: ஆமாம்.

இராவணன்: மனத்தூய்மைதானே மிக முக்கியம் யாக காரியத் திலே ஈடுபடுபவர்களுக்கு.

அக்னி: மனத்தூய்மைதான் முக்கியம்.

இராவணன்: தாங்கள் பல யாகங்களுக்குச் சென்றிருக்கிறீர் - வரம் - அருள.

அக்னி: போயிருக்கிறேன். இராவணன்: பல யாகங்களிலே தரப்பட்ட ஆகுதியை உண்டு.., (அக்னியின் தொந்தியைச் சுட்டிக்காட்டுகிறான், அக்னி கோபிக்கிறான்.)

தொடரும்...

-  விடுதலை நாளேடு, 20.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக