வியாழன், 15 நவம்பர், 2018

சபரிமலை அய்யப்பன் அவதார ரகசியம்?



கடா (ஆண் ஆடு) உழக்குப்பால் கறந்தது என்றால் கேட்பவருக்கு புத்தி எங்கே போச்சு?

- (தமிழகப் பழமொழி)

'சபரிமலை அய்யப்பா சரணம்'; சாமியே சரணம்-என்று கூவிக்கொண்டும் திரிகிறார் களே யாத்திரை பக்தர்கள்.

இந்த சபரிமலை அய்யப்பன் யார்? தெய்வம் என்பது உண்மையா? எந்த வகை மனிதன்? வரலாற்று அதிகாரபூர்வ - இன்னும் சொல்லப்போனால் ஆரியபுராண, இதிகாச பூர்வ ஆதாரங்கள் எதுவுமே கிடையாது இதற்கு.

இவன் பிறப்புபற்றிக் கூறப்படும் கதையோ - நல்லறிவும், நல்லொழுக்கமும் உடையோர் கேட்கவும் மனம் கூச-வெட்கப்பட வேண்டிய - இயற்கை விபரீத நடத்தை வர்ணனை, ஆணுக்கு, ஆண்கூடி பிறந்த பிள்ளையாம் இவன். உடலியல்-இயற்கை ஒப்புமா இதனை? பறவை - விலங்குகள் - ஊர்வன - நீர் -வாழ்வனவான உயிரினங்களிலும் இப்படி நடப்பதில்லையே.

விஷ்ணு பெண் வேடம் பூண்டாராம் (பெண்ணாக மாறியதாக மோகினி அவதாரம் எடுத்ததாக புராணம்) வேடதாரி பெண்ணான (விஷ்ணு) ஆண் மேல் சர்வஞானி ஞான கண்ணான நெற்றிக்கண்ணனான சிவனுக்கு மோகம் பொங்கிற்றாம். இருவரும் கூடினராம். பிள்ளை பிறந்ததாம். விஷ்ணுப் பெண், கர்ப்பம் தாங்கியது மாதமா ஆண்டா-யுகமர? பிள்ளை பெற்றது பாற்கடலிலா? சிவனுக்கு மோகினி விஷ்ணுவிடம், பிறந்த மகனுக்கு சாத்தன் அய்யனார் என்று பெயராம்.

கீட்டிசை கரிய சாத்தனும்      தென் சார் கீற்று வெண்பிறை    நுதற்களிற்றுக்

கோட்டிளங் களபக் கொங்கை     அன்னை அரும் குடவயின் மது மடையுடைக்கும்

தேட்டிளந் தண்ணந்துழாய்      அணி மொலித் தோன்றலும் வடவயிற்றோடு

நீட்டரும் போந்தினிமிர்      குழவெண்டோள் நீவியும்  காவலா நிறவி. (திருவிளையாடல் புராணம் திரு நகரம் கண்ட படலம்-43)

ஆரியர் பூர்வகாடு ஆராய்ச்சியாளர் கருத்துப்படி -பாற்கடல், மத்திய ஆசியாவுக்கு வடக்கே கோடியிலுள்ள பனிக்கடலான ஆர்க்டிக்கடல்.

அப்படியிருக்க, வெப்ப நாடான, மலையாளத்தில்; அதுவும் நெடும் உயர மலைச்சிகரக்காட்டிற்கு எப்படி சூலியான் விஷ்ணு மோகினி வந்தாள்? - மருத்துவச்சி யார்? பெற்றபின் அப்பிள்ளையை இந்த சபரிமலைக் காட்டில் அனாதையாகப் போட்டுவிட்டு ஓடியது ஏன்? (கள்ளத்தனமாகப் பெற்ற குழந்தையை எறிந்துவிட்டுச் செல்வது இப்போதைய கிரிமினல் சட்டப்படி சிறை தண்டனைக் குரிய குற்றமாயிற்றே) உலகப் பழிப்புக்கு அஞ்சியானால் இந்த ஆண் மோகி-சிவனார்-விஷ்ணு  மோகினி. கதையை-புராணங்கள் அம்பலப்படுத்தியது, சிவன் விஷ்ணுக்களுக்கு அவமானமல்லவா? - தெய் நிந்தையல்லவா? "நாத்திகம் அல்லவா?

உண்மை?


பழங்குடி மலைவாசிகளில் ஒரு பிரிவினரில் பல ஆண்கள் ஒரு பெண்ணை பிள்ளைப் பேறு துணைவியாகக் கொள்வது வழக்கம். (துரோபதைபோல) நீலகிரி தோதவர்களிடை யேயும் இவ்வழக்கம் இருந்து, இப்போது அறிவு வளர்ச்சி காரணமாக கைவிடப்பட்டு வருகிறது.

இந்த மலைவாசிப் பெண்கள் பிள்ளை பெற்ற சில மணி நேரத்திற்குப் பிறகு, குளித்துவிட்டு, காய்கனி கிழங்கு தேன், உணவு தேடும் கடமையின் மீது சென்று விடுவர். அந்தக் குழந்தை, அது யாருக்குப் பிறந்ததோ அந்த ஆணின் பொறுப்பில் ஒப்படைக்கப் படும். அவனே அதை அணைத்துக் காத்து-ஊட்டி, வளர்க்கும் பொறுப்பாளி.

மலைப்பகுதி அதிக குளிர் வட்டாரம். ஆதலால், தாயணைப்பு இல்லாவிட்டால் குழந்தை குளிரால் செத்துவிடும். எனவே, தாய்க்குப்பதில், அதனை உற்பத்திச் செய்த தகப்பனே அதனை அணைத்தபடிபடுத்தி ருப்பான். பிறந்த பதினொரு நாட்கள் அவன். அந்த அணைப்பு நிலையைவிட்டு அகல மாட்டான்.

மற்றும் குழந்தை, தகப்பனின் பரம்பரை என்ற முறையில் அதனைப் பாதுகாப்பது தகப்பன் கடமை. இதனால் பிள்ளையை அப்பனுடைய பிள்ளை என்று தான் கூறுவர். மலையாளத்தில்  நம்பூதிரிகள் ஆதிக்கம் வலுத்த பின்னரே பார்ப்பனரல்லாத மலை யாளப் பெண்கள் பார்ப்பனரின் போகமகளிராக , ஆக்கப்பட்டு - தாய்வழி - வம்சாவழிமுறை ஏற்படுத்தப்பட்டது.

அம்மலையுச்சிகளில் வசிக்கும் பழங்குடிகள் வேட்டையாடும். ஆண்மைத் தேவைப் பரம்பரையினர் என்பதால் தகப்பன் வழி பரம்பரை முறையைக் கொண்டனர். பிள்ளைகளுக்கு தகப்பனே பராமரிப்புப் பொறுப்பாளி. எனவே தகப்பன் அணைப்பில் வளர்ந்த குழந்தை எனப்பட்டது. அய்யப்பன், ஆய + அப்பன் (தாயுமானவன்) பிள்ளை என்பது பொதுப்படைப் பெயர்.

சரித்திரச் சான்று


யானை மலை-கிழக்கு மலைப்பகுதி களில் வசிக்கும் மலைவாசிகளான பழங்குடி களையும் - மலைச்சாரல் கிராமவாசி களையும் விசாரித்த போது அவர்கள் தந்த செய்திகளின் சுருக்கம் -

அய்தர்கான் திப்பு சுல்தான் கால படை எடுப்பின் போதும் மலையாள மக்கள் முசுலிம் மதத்துக்கு மாற்றப்பட்டபோதும் சங்கராச் சாரியார் சிவமதப் பார்ப்பன பூசாரிகளும் மாத்வ உடுப்பி கிருஷ்ண மதப்பார்ப்பனரும், உயிருக்கு பயந்து, உச்சிமலைக் காடுகளுக்கு ஓடி ஒளிந்தனர். இவர்களில் சிலர் சபரி (மான்) மலைப் பகுதிக்குச் சென்று அங்கிருந்த மலைவாசிகளின் ஆதரவில் வாழ்ந்தனர். இந்த மலைவாசிகள் இறந்த வர்களைப் புதைத்துக் கல் நடுவது வழக்கம். அவர்களில், புலி முதலிய வனவிலங்குகளை வேட்டை யாடுவதில் திறமைமிக்கவன். இறந்து விட்டால் அவனுக்கு வீரக்கல் நட்டு - விலங்குகளால்-சோனை மழையால் பாதிக்காதிருக்க மரத்தால் சுற்று வேலியும் மேல் கூரையும் அமைப்பர். ஆண்டுக்கு ஒரு தடவை, இந்த வீரக்கல் முன் கூடி, படையல்போட்டு, ஆடிப்பாடி வணக்கம் தெரிவிப்பர்.

இந்த வீரக்கல் கூடத்தைக்கண்ட மலையாளப் பார்ப்பனர்கள் அது என்ன, யாருடைய கோயில் என வினவினராம். இதற்கு மலைவாசிகளில் சிலர் அய்யப்பன் பிள்ளை (அப்பனுக்கு அப்பன் - மூதாதை) என்றும், சிலர் ஆயி-அப்பன்" (தாயு மானவன்) பிள்ளை என்றும் கூறினராம். இதனைக் கேட்ட பார்ப்பனர்கள். அய்யன். அப்பன் என்ற பெயரை, பால் கடல் கடைந்த மோகினி-சிவன் பிள்ளை பெற்றக் கதையுடன் ஒட்டுப்போட்டு- அய்யனும் - அப்பனும் (இரு ஆண்கள்) கூடி பெற்ற பிள்ளை; ஹரிஹரபுத்திரன் என்று பெயரிட்டு தாங்கள் தங்கள் ஊருக்குச் சென்றதும் இப்படிப் பிரசாரம் செய்து, ஆதரவு, திரட்டினர். ஆண்டுக்கொரு தடவை தங்கள் கோயில் பூசைப் பொருள் களான கற்பூரம் சாம்பிராணி -  பழம்பூவுடன் சபரிமலைக்குச் சென்றனர். மலைவாசி களுக்கு தூப தீபசாம்பிராணி கற்பூர-பூசை முறை, புதியதாகையால், அங்கே சென்ற பார்ப்பன பூசாரிகளே மந்திரம் ஓதி பூசை செய்தனர்.

இந்த வழக்கம் ஆண்டுதோறும் நடந்தது. வழியில் புலி, கரடியானை முதலிய வனவிலங்குகளை விரட்ட, அய்யப்பா அய்யப்பா என்று கூப்பாடு போட்டபடி சென்றனர். (திருப்பதி ஏழு மலைஏறும் போதும் கோவிந்தா - கோவிந்தா என்று கூவிச் செல்வதும் வன விலங்குகள் - தங்களை அணுகாதபடி விரட்டவேயாகும். சங்கு, சிகண்டி முழக்கமும் இதற்காக வேயாகும்)

நாளாவட்டத்தில் பாதுகாப்படையவும் தங்கள் வருமானத்துக்காகவும் அந்தப் பார்ப்பன பூசாரிகள் இந்த அய்யப்பன் - ஹரி ஹர - புத்திரனை பற்றிய புராணக்கதை கூறி, பாமர பாட்டாளி மக்களின் - ஆதரவைத் திரட்டி, அவர்களையும் அழைத்துச் சொல்ல லாயினர்.

இந்த வழக்கமே பார்ப்பனர்-அறைகுறை பார்ப்பன. பாமர மலையாளி மக்களின் மடமைப் பிரசாரங்களால் வலுவடைந்து, சுமார் பத்தாண்டுகளுக்கு முன் தான். அய்யப்பன் மகிமை சாமியாக்கப்பட்டான்.

இது மரத்தாலான கோயிலாகும். - கடலை எண்ணெய் விளக்குகள் வைக்கப்படும். இதனால் தான் அண்மையில் இக்கோயில் தீப்பற்றி எரிந்தது. (புது கல் கோயில் அமைக்கப் பணம் திரட்ட எரியச்செய்யப்பட்டதாகவும் சிலர், கருத்து) -

இதன் தெய்வீகம் என்பது ஹரிஹரபுத்திர - இயற்கை விரோதத முறை உற்பத்திக் கட்டுக்கதையின் கூட்டுச் சரக்கேயாகும். இதற்கு பணம் திரட்ட - தெய்வீகத்தில் நப்பாசை நம்பிக்கையூட்ட சமீபத்தில் சில தமிழக-பிரபல சினிமா நடிகர்களை இக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர், அவர்களால் காணிக்கைச் சேர்ந்ததோ என் னமோ! ஆனால் கோயில் தீப்பற்றி எரிந்து அவர்களுக்கு பழியைத்தான் கூட்டு வித்துள்ளது:

- விடுதலை ஞாயிறு மலர், 10.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக